பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்து - சி.சு. செல்லப்பா

வகை பற்றி அதன் வளர்ச்சி ரீதியாகவும் - குறிப்பிட்ட காலவரை வகுத்துக்கொண்டும், சிறந்த ஆசிரியர்பட்டியல் வழியாகவும் அல்லது சிறந்த கதைகள் தரம்பார்த்தும் ஏதாவதொரு விதமாகத் தொகுப்பு தயாரிக்கலாம்.

இந்த நான்கில் கடைசி வகையைப் பின்பற்றியது க.நா.சுவின் ‘சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற கட்டுரை. அதை முன் வைத்துக்கொண்டு பார்க்கும்போது, கட்டுரையில் சிறந்த தமிழ்சிறுகதைப்பட்டியல் ஒன்று கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல முடிகிறது.

மெளனி, பிச்சமூர்த்தி, க.நா.சு ஆகியோரது கதைகளை மட்டும் சொல்லி, அதிலும் மெளனி ஒருவரைப்பற்றித்தான் சிறந்த சிறுகதை ஆசிரியர் என்று குறிப்பிட்டுவிட்டு 'குறிப்பிட்ட ஆசிரியர்களுடைய எந்தெந்தக்கதைகளை சேர்த்துக்கொள்வது என்பது பற்றி...

...பின்னர் விமர்சனம் செய்து பார்க்கலாம் என்று கட்டுரையை முடித்துவிட்டார். ஒரு ஐந்தாறு பக்க ஆராய்ச்சிக்குப்பிறகும் கட்டுரையின் நோக்கம் நிறைவேறாமலேயே நின்றுவிட்டது.”

- க.நா.சுவின் கட்டுரை பற்றி இப்படித் தெளிவாக தமது கருத்தை வெளியிடும் செல்லப்பா. அதற்காக க.நா.சு விடம் சண்டைக்குப்போக முடியாது என்று எழுதி அதற்கான காரணத்தையும் விளக்கியிருக்கிறார்.

எனவே கட்டுரையின் தலைப்பு ‘சிறந்த தமிழ்ச் சிறு கதாசிரியர்கள்' என்று இருந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஏனெனில் முதலாவதாக ஒரு எட்டுப் பேர்களும், இரண்டாம் பக்ஷ்மாக இடம் பெறக்கூடிய ஒரு ஆறு பேர்களும், இவர்களோடேயே சேர்க்கக்கூடிய இரண்டுபெயர்களும் ஆக க.நா.சு. கருதும் பதினாறு சிறந்த சிறுகதை ஆசிரியர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் கிடைத்திருக்கிறது.

இந்தப்பட்டியல் தருவதும் ஒரு திறனாய்வுப் பார்வை யுள்ளவரது சுதந்திரத்துக்குள் வருவதாகும். எனவே இந்தப் பெயரை ஏன் விட்டாய்? அதை ஏன் சேர்த்தாய்' என்று ஒரு விமர்சகனிடம் வம்புக்குப் போவதில் விவேகம் கிடையாது. அதற்குப்பதில், சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் என்று என்ன ஆதாரங்களைக் கொண்டு அவர் முடிவுகட்டி இருக்கிறார் என்று அவரிடமிருந்து எதிர்பார்ப்பதும்,

140