பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்து - சி.சு. செல்லப்பா


ஒரு குறிப்பிட்ட நூல் அல்லது ஆசிரியரைப்பற்றி பகுப்புமுறை (Analytical) திறனாய்வு செய்வதின் மூலம் இலக்கிய ரசனையை வளர்க்க முடியும் என்பது என்கருத்து. நாம் எத்தகைய ஆதாரங்களைக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தோம் என்று வெளித் தெரிவதுதான் மற்றவரிடம் நம் கருத்தைத் தோற்ற வைப்பதற்கு உதவும். பொதுப்படையாகச்சொல்வதும், முடிவுகளைமட்டும் அழுத்தமாகச் சொல்வ்துடன் நிறுத்திக் கொள்வதும் - இலக்கிய, சரித்திர ரீதியாகச் குறிப்பிடுவதற்குப் போதுமே தவிர படைப்பாளர், படைப்பு பற்றி மதிப்பு அறிய உபயோகமாகச் கூடியதாகச் சொல்ல முடியாது. இன்றைய தமிழ் இலக்கிய ரசனை வளர பகுப்பு முறைத்திறனாய்வு வேண்டும்” என்கிறார் செல்லப்பா.

க.நா.சு கட்டுரை மீதான சாமிநாத ஆத்ரேயனின் கண்டனம், செல்லப்பாவின் விளக்கம் ஆகிய பகுதிகளை நாம் விரிவாக இங்கே சுட்டிக் காட்டியதின் நோக்கம் - எழுத்து - கடைசி இதழ் வரையில் - செல்லப்பாவின் விமர்சனக் கொள்கை எப்படி இருந்தது என்கிற அடையாளம். எழுத்து இரண்டாவது இதழில் வெளிவந்த இந்தப் பகுதி மூலம் தெளிவாகத் தெரிகிறது என்பதால்தான்.

அன்றுமட்டுமல்ல; இன்றும் கூட-வெகுஜனங்கள் விரும்பிப் படிக்கும் பத்திரிகையில் எழுதப்படும் சிறுகதைகள் நாவல்கள் எல்லாம் இலக்கியத் தரம் வாய்ந்தவை அல்ல என்று ஒரு கருத்து சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. க.நா.சு தான் இந்தக் கருத்தின் மூலகர்த்தா என்பது பலரது நம்பிக்கை. இந்தக் கருத்து பற்றியும் தமது அபிப்பிராயத்தை தயக்கமின்றி கூறுகின்றார் செல்லப்பா.

“....இன்னொன்று. பொதுவாக பத்திரிகையுகம், பத்திரிகை அவசரம், தேவை, நெருக்கடி என்று காரணம் கூறி, கதைகளின் தரம் பற்றி முடிவு கூறிவிட முடியாது. அந்தந்தக் காலத்தில் அந்தந்தப் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட அவசரம் தேவை நெருக்கடி ‘மணிக்கொடி' போன்ற சின்னப் பத்திரிகைளுக்கும் இருக்கத்தானே செய்திருக்கின்றது. இதற்கெல்லாம் உட்பட்டு வெளியானவைகள் தானேகா.நா.சுபட்டியல் ஆசிரியர்களுடையவையும் ஏன்? இவை பல்வேறு சமயங்களில் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாவதற்காக எழுதப்பட்ட கதைகள் என்று அவரேதன் ஆடரங்கு கதைத் தொகுதி முகவுரையில் குறிப்பிட்டு பத்திரிகை ஆசிரியர்களுக்கும்,

142