பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்


வெறும் கதைக் குவியல்களுக்கு நடுவில் முதலாவதாக சிறுகதை உருவமாகக் கிடைப்பதே ஒரு பெரிய விஷயம். அடுத்து கதை சொல்லபட்டிருக்கும் விதம். இதுதான், கதையம்சம் கதையிலிருந்து கிடைக்கும் மதிப்பு இரண்டையும் விட, ரசிப்பதற்கென ஏற்பட்ட ஒரு கலைப் பொருளில் அதிகம் பார்க்க வேண்டியதாகும்.

இந்த சொல்லும் விதம் 'தர்க்கம்' சிறுகதையில் மிகையின்றி, வகையாக, விஷயம் தெரிந்த ஒரு ஞானத்துடன் போதிய சூழ்நிலை கிளப்பி, தகுந்த வார்த்தைகளை உபயோகித்து, பொருத்தமான விவகாரமும் கலக்க, உச்சநிலைக்குக் கதையை படிப்படியாக ஏற்றிச் சென்று கதைக்கு ஒரு முழுமையும் ஒரு ஒருமையும் ஏற்படுத்திக் கையாளப்பட்டிருக்கிறது. இதுபோதும் கதை மூளியல்ல என்பதற்கு.

இதைவிடச் சிறந்த கதை என்பது அது வேறு விஷயம் ஒரு ஆசிரியரின் படைப்பு பல்வேறு தரங்களில் அமையத் தான் செய்யும். சந்தர்ப்பத்துக்கு கிடைத்த-ஒரு ஒப்புக் கொள்ளப்பட்ட ஆசிரியரின் படைப்பை அவர் எப்போதோ எழுதிய மிகச்சிறந்த கதையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது ஒரு பத்திரிகாசிரியர் செய்வதல்ல. பரிசுப் போட்டி நீதிபதிகள் வேலை அது

- என்று ஜெயகாந்தனின் கதையின் கலையம்சங்கள் குறித்து விளக்கும் செல்லப்பா பராங்குசத்தின் கதையிலிருந்து ஒரு பாராவை மட்டும் எடுத்தெழுதி சிறுகதையின் இலட்சணங்கள் என்னென்ன என்பது பற்றி அந்தப் பாராவிலிருந்தே உதாரணம் காட்டி விளக்கி இருக்கிறார்.

எழுத்து நான்காவது இதழைப்பார்க்கும் போது அதன்வாசகர் கடிதங்கள் பகுதி 'எழுத்து’ என்கிற பத்திரிகைக்குள்ளேயே விமர்சன இலக்கியம் - அல்லது விமர்சனங்களை வளர்ப்பதற்கான ஒரு தனிப்பத்திரிகையாக சிறு பத்திரிகையாக வளர்ந்து வருவது தெளிவாகிறது.

மூன்றாவது இதழில் ஜெயகாந்தன் பராங்குசம் கதையின் மேன்மை பற்றி செல்லப்பா எழுதிய தலையங்கத்தை மறுத்து - ஜடாதரன் கடிதத்தை ஆதரித்து க.நா.சு எழுதிய கடிதம் நான்காவது வெளியிடப் பட்டிருக்கிறது.

147