பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

ஸ்ரீவைகுண்டம் ஊரில் வசித்த போதுதான் சி.சு. செல்லப்பா எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற உந்துதல் பெற்று கதை எழுதத்தொடங்கினார். அவர் எழுதிய முதல் கதையை சுதந்திரச் சங்கு வாரப் பத்திரிகைக்கு அனுப்பினார். அதன் ஆசிரியர் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு பெயர் பெற்றிருந்த சங்கு சுப்பிரமணியன். அவர் அந்தக் கதையை வரவேற்று ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கதையைத் திருத்தி சங்கு இதழில் வெளியிட்டார். அவருடைய கடிதமும், புதிய எழுத்தாளனுக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்டிய செயலும் தன்னுள் எத்தகைய கிளர்ச்சி ஏற்படுத்தியது, மேலும் மேலும்எழுத எப்படி உற்சாகம் தந்தது என்பதை செல்லப்பா பலமுறை சொல்லியிருக்கிறார். இதை என் சிறுகதை பாணி நூலில் விரிவாகவே பதிவு செய்துள்ளார்.

‘என்னை சிறுகதையாளனாக ஆக்கி வெளிப்படுத்தியவர் சங்கு சுப்பிரமணியன். அவரை நான் இன்னும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன்' என்று செல்லப்பா குறிப்பிட்டிருக்கிறார்.

9