பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

புதுக் கவிதைவேறு என்பதை விளக்கி ஒரு நீண்ட ஆசிரிய உரையை எழுதினார்.

இதுபற்றிக் குறிப்பிடும் வ.க. -

“பிச்சமூர்த்தி கட்டுரை பிரசுரமானதற்குப் பிறகு ‘எழுத்து’ ஏட்டில் கவிதை, வசன கவிதை பற்றிய சர்ச்சைகள் அதிகமாக இடம் பெற்றிருந்தன. எழுத்து 15ஆவது ஏட்டில், தலையங்கப்பகுதியாக, ஆசிரியர் தனது எண்ணங்களை வெளியிட்டிருக்கிறார். ....புதுக்கவிதை வேறு, வசனகவிதை வேறு என்று பிரித்துப் பேச முற்பட்ட ‘எழுத்து’ ஆசிரியர் ந.பியின் சில அபிப்பிராயங்களுக்கு மாறுபட்டகருத்துக்களை வலியுறுத்தியது குறிப்பிடத்தகுந்ததாகும்.” என்கிறார்.

பிச்சமூர்த்தி, செல்லப்பா ஆகியோரது கருத்து வேறுபாடுகள் எப்படியிருப்பினும்-பிச்சமூர்த்தியின் ‘வசன கவிதை’ என்ற கட்டுரை வெளிவந்தபிறகுதான் - எழுத்து - முழுக்க முழுக்க புதுக்கவிதை வளர்ச்சிக்கான ஏடாக மாறியது; எனினும் இந்தச் சர்ச்சைக்கான - இந்தப் புதிய மாற்றத்துக்கான - கொடி ஏற்றம் 5ஆவது இதழில் வெளியிடப்பட்ட கு.ப.ராவின் வசனகவிதை’ என்ற கட்டுரை தான் என்று கொள்வதில் தவறேதுமில்லை.

வசன கவிதை என்பது என்ன? அது கவிதையா? அல்லவா? அப்படி எழுதுவது கேலிக்குரியதா? அல்லது கேலி பேசுபவர்கள்தான் நகைப்பிற்கிடமானவர்களாக என்பதை எல்லாம் மிகச் சுருக்கமாக அதே சமயம் மிகவும் அழுத்தமாகவும் தெளிவாகவும் - கு.ப.ராவின் கட்டுரை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.

புது கவிதையின் வளர்ச்சி - மறுமலர்ச்சிக்கான ஏடாக 1959 முதல் பத்தாண்டுக் காலம் தீவிரமாக பணியாற்றிய எழுத்து என்கிற மாத ஏடும் மறைந்துவிட்டது. அதன் ஆசிரியர் செல்லப்பாவும் இப்போது இல்லை. எனினும் புதுக்கவிதையா மரபுக்கவிதையா என்ற சர்ச்சை இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. புதுக்கவிதையின் வளர்ச்சி போலவே அந்தச் சர்ச்சையும் வளர்ந்து செல்லப்பா அங்கீகரித்த புதுக்கவிதை படைப்பாளிகள் யார்? அவர் அங்கீகரிக்க மறுத்துவிட்ட புதுக்கவிதை கவிஞர்கள் யார் என்கிற அளவுக்கு புதிய புதிய சிகரங்களை நோக்கி பயணித்தபடியே இருக்கிறது.

152