பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


க.நா.சு. சொல்கிறார் :

“இலக்கியத்தில் சோதனை செய்து பார்ப்பது என்றால் என்ன என்பது பற்றிப் பலரும் என்னைக் கேட்கிறார்கள்.

இதுவரை செய்யப்படாத எதையும் செய்து பார்க்க முயலுவதைத்தான்நான் சோதனை என்று சொல்லுகிறேன். சோதனை வெற்றி பெற்றால் இலக்கியமாகி விடுகிறது. நிலைத்து விடுகிறது. சோதனை முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டும் - வெற்றி பெறாவிட்டாலும் கூட.

சுவடில்லாத பாதையிலே, தனிவழிஅமைத்துக் கொண்டு போகச் செய்யப்படுகிற முயற்சி எதுவும் முயற்சியாக முக்கியமானதுதான். இந்த முயற்சிகளில்தான் பிற்காலத்தில் இலக்கிய சிகரங்களை எட்டுவது சாத்தியமாகிறது.

இலக்கியத்தில் புதுவிஷயம் என்பது அனேகமாக சாத்தியமில்லை என்று சொல்லலாம். ஏனென்றால் சொல்ல வேண்டிய பொருள் சொல்பமே. அதைப் பலரும் பலதினுசாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு தினுசாகச் சொல்லிப் பார்க்கிற முயற்சியைத்தான் சிறப்பாக சோதனை என்று சொல்ல வேண்டும்.

சோதனை பொருளைப் பற்றியதாக இராது இலக்கிய உருவத்தைப் பற்றியதாக இருக்கலாம். அல்லது பொருளுக்கும் உருவத்துக்கும் உள்ள உறவு முறைகளை ஆராய்வதாக இருக்கலாம் இதைப் புது மாதிரியாகச் செய்பவனைச் சோதனைக்காரன் என்றும், வெற்றிகரமாகச் செய்பவனை இலக்கிய கர்த்தா, படைப்பாளி என்றும் நாம் போற்றுகிறோம்.

இலக்கியத்திலே புதுமை என்பதுதான் உயிர்நாடி. அதை வைத்துத்தான் இலக்கியம் இயங்குகிறது. அந்தப் புதுமையைச் சாத்தியமாக்குகிற காரியம் இலக்கியத்தில் சோதனைக்காரர்களால் சிறப்புறுகிறது.

ஒரே இலக்கிய சோதனையை, அதன் உருவம் பூரணத்துவம் பெறுகிற வரையில் செய்தவர்கள் உண்டு. நம்மிடையே தமிழில் சிறுகதை எழுதியவர்களில் மெளனியை உதாரணமாகச்சொல்லலாம். பல விதமான சோதனைகளைச் சிறுகதை அளவில் செய்து பார்த்தவர் புதுமைப்பித்தன். உருவத்திலும் உருவ விஷய உறவுகளிலும்

162