பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

முன்வைத்துக்கொள்ளாமல் 'உலகத்தோடு சண்டைபிடித்துக் கொள்ள வேண்டும்' என்ற ஒரு வக்ர ஆசை - அதில் ஒரு மகிழ்ச்சியும் கொள்ளாமல் 'அவ நம்பிக்கைதான் என் நோக்கு' என்று பெருமைப்பட்டுக் கொள்ளாமல் - ஒரு புரட்சிக்காரன் இலக்கியத் துறையில் இருக்கமுடியுமா? முடியும் என்பதற்குப் புதுமைப்பித்தன் ஒரு உதாரணம்" என்கிறார் செல்லப்பா.

"இந்த 'எழுத்து' ஏடு கதை, கவிதை, விமர்சனம், நடை ஆகிய துறைகளில் புதுமைப்பித்தன் ஒரு கலகக்காரராக சாதித்திருப்பதை ஓரளவு அளவிடுவதற்கும், இதுவரை வெளித்தெரிய வராத சில ரசமான தகவல்களைக் கொண்டு அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வளரும் இலக்கியத்துக்கு இது உதவக்கூடும். இன்று வளரும் இலக்கியம் இந்தப் புரட்சிப்படைப்பு தோரணையைத் தொடர்ந்து சுமந்து செல்லக் கூடுமானால் இந்தப் புரட்சி மரபு வழியில் தலைசிறந்த படைப்புகள் வெளிவருவதற்கு சாத்யமாக இருக்கும்"

-என்று புதுமைப்பித்தன் எழுத்துக்கள் பற்றி இதழுக்கு முகமன் கூறியிருக்கிறார் அவர்.

கண்ணனின் சின்னஞ்சிறு வாயிக்குள் யசோதை உலகங்கள் அனைத்தையும் காட்சியாகக் கண்டாள் என்று புராணங்கள் கூறுவது போல இந்தச் சின்னஞ்சிறு சிறப்பிதழில் புதுமைப்பித்தன் எழுத்துக்களின் சகல பரிமாணங்களையும் வாசகர்கள் காணவும் பயனடையவும் வழிசெய்திருக்கிறார் செல்லப்பா.

ராமநாதன் எழுதிய சில 'ரசமான சம்பவங்கள். பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) எழுதிய பித்தனும்புதுமையும்' ரா.ழரீ தேசிகன் எழுதிய 'சொவியின் உரைநடை' வாணிசரணன் எழுதிய 'விமர்சகர் விருத்தாசலம்' சாலிவாஹனன் எழுதிய ‘கவிராயர் வேளுரார்' கு.அழகிரி சாமியின் 'புதுமைப்பித்தன் சொன்னவை' கி.ரா எழுதிய ‘நான் நாஸ்திகனாயிருந்தேன்'. பி.வி.சுப்ரமணியம், சிட்டி ஆகியோரின் சொ.வி பற்றி என்று ஒன்பது கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். நவமணிகள் என்றே சொல்லலாம்.

செல்லப்பாவின் 'எழுத்து'களில் பெரும்பாலும் இலக்கியத்தில் புதுமுயற்சி - சோதனை - புரட்சி என்பன போன்ற

164