பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

- என்று ஒரு படிவத்தை இணைத்திருக்கிறார்.

ஆறாவது இதழின் இரண்டாம் பக்கத்தில் எழுத்து பற்றிய ஒரு முழுப் பக்க விளம்பரம். அதிலே சந்தா சேர்பவர்களுக்கு செல்லப்பாஎழுதிய ஒரு புத்தகம்.அன்பளிப்பாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு.

அந்த விளம்பரத்தை இங்கு காண்போம் :

உங்கள் இலக்கிய ரசனைக்கு 12 எழுத்துக்களும் ஒரு புத்தகமும்.

எழுத்து தமிழ் இலக்கியத் துறையில் புதுப்பாதை வகுத்துச் செல்லும் புதுவிதப் பத்திரிகை என்பதை அதன் இதுவரைய 6 ஏடுகளும் நிரூபித்துக் காட்டிவிட்டன. தன்ரகத்தில் இன்று தனியொரு பத்திரிகையாகவாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் கருதப்படுகிறது எழுத்து.

எழுத்துக்கு நீங்கள் இன்னும் நேரடி சந்தாதாரராக சேரவில்லை என்பது தெரியும். நேரடியாக சந்தாதாரர்களாக சேருபவர்களுக்குத் தான் அனுப்பப்படும் எழுத்து.

எழுத்து சந்தா அதிகம் அல்ல. தனிப்பிரதி 50 காசு ஆனாலும் பெரிய அளவில் நல்ல காகிதத்தில் அச்சிடப்படும் 'எழுத்து' வின் ஆண்டுச் சந்தா 5 ரூபாய்தான்.

இதோ !

இப்பொழுது உங்களுக்கு இன்னொரு சலுகையும் கிடைக்கிறது. மேலே உள்ள புத்தகம் (வாடிவாசல்) பற்றி தகவல்களைப் படியுங்கள்.

எழுத்துக்கு நேரடி சந்தாதாரர்களாக சேர்பவர்களுக்கு ‘வாடிவாசல்' கதைப்புத்தகம் அன்பளிப்பாக அனுப்பப்படும்.

‘எழுத்து'வில் வரும் ஒரு ஏடுகூடத் தவறாது உங்களுக்குக் கிடைக்க வகை செய்து கொள்ளுங்கள். நீங்கள் தவறவிடும் ஒவ்வொரு எழுத்து ஏடும் உங்களுக்கு நஷ்டம்.

இவ்வளவு சிக்கனத்தில் ஒரு ஆண்டுக்கு இலக்கியத்தரமான 12 ஏடுகளும் ஒரு சிறந்த கதைப்புத்தகமும் கிடைப்பது ஒரு அரிய வாய்ப்பு உங்களுக்கு.

வாடிவாசல்

சி.சு.செல்லப்பா

172