பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்


கொம்புக்கும் கைக்கும் நடக்கும் மரணப் போராட்டமான பாண்டிய நாட்டு ஜல்லிக்கட்டை வைத்து எழுதப்பட்ட கதை.விலை ரூ.1.00

- என்பது செல்லப்பா வெளியிட்ட விளம்பரம்.

எட்டாவது இதழில் சந்தாசேகரிப்பு எப்படி இருக்கிறது என்பது பற்றி வாசகர்களோடு பேசுகிறார் செல்லப்பா. அதிலே எழுத்து ஏட்டை நடத்துவதில் தாம் எதிர் கொள்ளும் கஷ்டங்களைப்பற்றி லேசாகக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

“எழுத்து' சந்தாதாரர்கள் தொகை, குருவி கொத்திச் சேகரிப்பதுபோல மெதுவாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் கணிசமான அளவுக்கு உயரவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். எழுத்து வாசக அன்பர்கள் தங்கள் செல்வாக்கை உபயோகித்து ஆங்காங்கே உள்ள இலக்கிய ஆர்வம் படைத்த வாசகர்களுக்கு எழுத்து பற்றி அறிவித்தும், அத்தகைய வாசகர்களைப்பற்றி எனக்கு அறிவித்தும் ஒரு தொடர்பு ஏற்படுத்தி உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த மாதிரி முந்தின வேண்டுகோளுக் கிணங்கி பல வாசகர்களுக்கு 'எழுத்து'வை அறிமுகப்படுத்திக் கொடுத்திருக்கும் எழுத்து சந்தாதாரர் அன்பர்களுக்கு என் நன்றியையும் இந்தச் சந்தர்ப்பத்தில் செலுத்திக் கொள்கிறேன்.

காகித விலை உயர்வு காரணமாக சற்று தரம் குறைந்த காகிதத்தை உபயோகிக்க வேண்டி இருக்கிறது. நிலைமை சரியானதும் பழைய மாதிரி தரமிகுந்த காகிதத்தில் வெளியிட ஏதுவாக இருக்கும். எழுத்துக்கும் வாசகர்களுக்கும் உள்ள உறவு ஒரு குடும்ப உறவு போன்றதால் இவைகளைச் சொல்லிக் கொள்வது அவசியமாகிறது”

- என்று எழுதியிருக்கிற செல்லப்பாஇன்னொரு தகவலையும் சொல்கிறார் எழுத்து சந்தா கேட்டு இருந்த இடத்திலிருந்தே வேண்டுகோள் மட்டும் விட்டு விட்டு சும்மா இருந்துவிடவில்லை அவர் எழுத்துக்கு சந்தாவழங்கக்கூடிய இலக்கிய அன்பர்களைத் தேடி ஊரூராகப் பயணமும் நடத்தி இருக்கிறார். அதனால் எழுத்து எட்டாவது இதழ் ஒன்றிரண்டு நாட்கள் தாமதமாகவே வெளிவந்திருக்கிறது. ஒருநாள் இருநாள் அல்ல மூன்று வாரகாலம்

173