பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு.செல்லப்பா

தொடர்ந்துவெளியூர்களில் பயணம் செய்து இலக்கிய அன்பர்களை நேரில் சந்தித்து சந்தா சேர்த்திருக்கிறார் செல்லப்பா.

பத்தாவது இதழில்-வாசகர்களின்பாராட்டுகளையும் அவர்கள் கூறும் புகார்களையும் குறிப்பிட்டு பதிலளித்திருக்கிறார்.

"உண்மையாக எழுத்து ஒவ்வொரு ஏடு பற்றியும் வாசக அன்பர்கள் மனம் விட்டு எழுதித் தெரிவிக்கும் கருத்துக்களைப் படிக்கும்போது ரொம்ப திருப்தியாக இருக்கிறது” என்று குறிப்பிடும் செல்லப்பா “எங்கள் கடிதங்களை நீங்கள் வெளியிடவேண்டும் என்கிற அவசியமில்லை ‘ஏன், எங்களுக்கு நீங்கள் பதில் கூட எழுத வேண்டிய அவசியமில்லை. 'எழுத்து'வில் செயலில் காட்டியோ கருத்துக்களை வெளியிட்டோ செய்தால் போதும் என்று கூறுகிறார்கள் - என்பதாகக் குறிப்பிட்டு விட்டு வாசகர்களின் பெரும்பாலான புகார்கள் தொடர்ச்சியாக பல இதழ்கள் தபாலில் கிடைக்கவில்லை என்றிருப்பதை சுட்டிக்காட்டிவிட்டு அதற்கு சமாதானமும் கூறுகிறார்.

‘எழுத்து' தவறாமல் முதல் தேதியன்றே அனுப்பப்படுகிறது. கிடைக்கவில்லை என்றால் எனக்கு உடனடியாக எழுதுங்கள்" என்கிறார். பெரும்பாலும் ஆபீஸ் முகவரிக்கு அனுப்பப்படும் பிரதிகள்தான் சந்தாதாரர்களின் கைக்குக் கிடைக்காமல் போய் விடுகிறது. ஆகவே வீட்டுவிலாசத்தைக் கொடுங்கள். தவறாது உங்கள் கைக்கே கிடைக்கும் என்று ஆலோசனை கூறியிருக்கிறார். ஒரு எழுத்து ஏடு கூட சந்தாதாரர்கள் இழந்துவிடக் கூடாது என்கிற அக்கறை தனக்கிருப்பதை எடுத்துக் காட்டிவிட்டு வாசகர்களுக்கு மறுபடியும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்.

"தீபாவளி வருகிறது. உங்கள் நண்பர்களுக்கு பரிசாக நீங்கள் ஏதாவது தரவிரும்பினால் அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு எழுத்து சந்தா நீங்கள் கட்டி அவர்களையும் எழுத்து வாசகர்களாக்கி எழுத்துக்கும் ஒரு ஊக்கம் தரும் படி கேட்டுக்கொள்கிறேன். சந்தாதாரர்கள் ஆளுக்கொரு சந்தாசேர்த்துக் கொடுத்தால் எழுத்து வரும் ஆண்டுக்கு இன்னும் பெருநடைபோட்டுச் செல்லும் வலுப்பெற்றதாக ஆகிவிடும் உங்கள் ஆதரவில்” என்று வேண்டுகோளை முடிக்கிறார்.

இவைகள் எல்லாமே எழுத்து ஏடு - முதல் ஆண்டில் - 10 இதழ்களைத் தொடுவதற்கு முன்பே - செல்லப்பாவுக்கு பத்திரிகை

174