பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

‘எழுத்து'வில் இருந்த அளவுதான் சரி என்றும் அடம் பிடிக்கமாட்டேன்.” என்கிறார் செல்லப்பா!

எழுத்து பற்றிக் கூறப்பட்ட குறைகள் என்று செல்லப்பா பட்டியலிட்டிருப்பதைப் படிக்கும் "எவருக்கும் இப்போது வெளிவரும் சிறுபத்திரிகைகள் மட்டும் என்ன? இதே புகார்கள்தானே - ஒவ்வொரு சிற்றிதழ் மீதும் வாசகர்களால் மட்டுமல்ல; எழுத்தாளர்களாலேயே கூறப்படுகின்றன?"- என்று கேட்கத் தோன்றும்' . அவ்வளவு துல்லியமாக - கூறப்பட்ட குறைகளை அளந்து சொல்லியிருக்கிறார் அவர்.

முதலில் எழுத்து - ஒன்பதாண்டுகளில் என்ன சாதித்தது என்பதை தன்னடக்கத்தோடு சுட்டிக்காட்டுகிறார்.

"முதலில் 'எழுத்து' மாதிரி ஒரு பத்திரிகை தமிழுக்கே புதுசு. முதலாவது' இன்று வரை மற்றொன்று தோன்றவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளவேண்டும். விமர்சனம் தமிழில் வளராததுறை. எனவே 'ஸ்பேட் ஒர்க்’ என்கிறோமே சிரமமான பூர்வாங்க வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அதைத்தான் 'எழுத்து' இந்தப் பத்தாண்டுக்காலத்தில் செய்ய முயன்றிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். அந்த வேலையாவது கணிசமாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்பதும் எனக்கு இன்னும் சந்தேகமே. ‘எழுத்து'வோடு உறவு கொண்டவர்கள்தான் மதிப்பிடவேண்டும்.

ஆனால் ஒன்று; ஒஹோ என்று இல்லாவிட்டாலும் இன்று தமிழில் இலக்கிய விமர்சனக் கூட்டங்கள், கட்டுரைகள் படிப்பது, நூல்களையும் ஆசிரியர்களையும் விமர்சிப்பது, விவாதக் கருத்தரங்குகள், பட்டிமன்ற சர்ச்சைகள், விமர்சன நூல்கள் வெளிவருதல் ஆகியவை நடப்பது எழுத்து வின் பத்தாண்டுக்கால பாதிப்பால்தான் என்று நினைக்க முடிகிறது."

- என்று 'எழுத்து' வின் பத்தாண்டுகள் சாதனை பற்றிக் குறிப்பிடும் செல்லப்பா காலாண்டிதழாக மாறிஇருக்கின்ற எழுத்து - எப்படி இருக்கும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

"மேலே 'எழுத்து' சம்பந்தமாக எடுத்துச் சொல்லப்பட்ட விருப்பங்கள் நிறைவேறக்காலத்துக்குக் காத்திருப்பதுதான் சரி என்று பட்டது. இந்தப் பத்தாவது ஆண்டில் அவைகளை நிறைவேற்ற

179