பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

112ஆவது இதழ்முதல் காலாண்டிதழாக மாற்றப்பட்ட எழுத்து 40 பக்கங்கள்-விலை ரூபாய்1.50 என்று மூன்றேமுன்று இதழ்கள்தான் வந்தது. அந்த மூன்றாவது இதழின் கடைசிஅட்டையில் 12 எழுத்து. இதழ்களுக்கான மூன்றாண்டுச்சந்தாகட்டினால் (15ரூபாய்) இரண்டு புத்தகங்கள் (3.50 முதல் 4.25 மதிப்புள்ளவை) அன்பளிப்பாகத் தரப்படும் என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பின் தலைப்புப் பகுதியில் மிகவும் உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் சந்தாதாரர்களுக்கு விடுத்திருந்தார்.

"அன்புள்ள வாசகர்களே ,

எழுத்து, எழுத்து பிரசுரம், நான் மூன்றும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு பத்தாண்டு காலமாக செயல்பட்டுவரும் ஒரு முக்கூட்டு முயற்சி. விமர்சனத்திற்காக ஒரு பத்திரிகையையும், இலக்கியத்தரமான - மற்ற புத்தகப் பிரசுரங்கள் போட முன்வராத எழுத்தாளர்களது நல்ல படைப்புகளைப் புத்தமாகக் கொண்டுவர ஒரு பிரசுரத்தையும் சேர்த்து துணிந்து ஒருவனாக நடத்தி வருவது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை.

எழுத்து-எழுத்து பிரசுரம் இரண்டையும் வைத்துத் தான் நான். என்னைவைத்துதான் அவை.

இரண்டும் தொடர்ந்து வளர திடமான இலக்கியப் பணிக்கு போதிய ஆதரவு அவசியம்-வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அதுக்கான ஒரு திட்டம் போட்டிருக்கிறேன். கீழே விவரம் வேண்டுகோளைப் பொருட்படுத்தி தக்க ஆதரவு தரும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.”

- என்பது செல்லப்பாவின் வேண்டுகோள் (அவரது திட்டம் என்பது மூன்று ஆண்டு சந்தா செலுத்தினால் தொகை ரூ.3.50 முதல் 4.25 ரூபாய் மதிப்புள்ள இரண்டு புத்தகங்களும், இரண்டு ஆண்டு சந்தா செலுத்தினால் ரூபாய் 2 முதல் ரூ.2.50 மதிப்புள்ள இரண்டு புத்தகங்களும், ஒரு ஆண்டு சந்தா செலுத்தினால் ரூ.1 முதல் 1.25 மதிப்புள்ள புத்தகங்களும் அன்பளிப்பாக அனுப்பப்படும் என்பதுதான்.)

இந்த விளம்பரம் வெளியிடப்பட்ட இதழுக்கு-அடுத்து வந்த 115ஆவது இதழின் விலை ரூ.1.50 லிருந்து ரூ.1.25ஆகக்

181