பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

கொண்ட வாசகர்களும் படித்து சிற்றிதழ்களின் வெற்றியோ தோல்வியோ எதன் அடிப்டையில் கணிக்கப்பட வேண்டும் என்பதை செல்லப்பாவின் அனுபவம் மூலம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மையின் வெளிச்சமாகவும் குரலாகவும் அமைந்திருக்கிறது.

"இந்த ஏட்டோடு எழுத்துக்கு பத்து வயது நிரம்புகிறது. அதாவது இங்கிலீஷில் : டிகேட் என்கிறோமே-பத்து ஆண்டுகள், என்று குறிப்பிடும் படியான கால அளவை எட்டிவிட்டது. ஒரு சின்னப்பத்திரிகை, விமர்சனம், புதுக்கவிதை இரண்டில் மட்டும் முதன்மையான அக்கறை காட்டி வந்திருக்கும் ஒரு இலக்கிய ஏடு பத்து ஆண்டுகள் வந்து விட்டது என்றால் நம்புவது சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனால் இது நடப்பு, தமிழ் இலக்கியப் பத்திரிகைத் துறையில் இதுவரை காணாத ஒன்று. இந்த சாதனையுடன் அடுத்த ஏடுமுதல் பதினோறாவது ஆண்டுக்குள் நுழைந்து அடுத்த கால அளவான மாமங்க காலத்தை நோக்கி முன்னேற இருக்கிறது.

ஆனால் வெறுமனே கால அளவை மட்டும் கொண்டு எழுத்துவின் சாதனையை பெரிசுபடுத்தி பேசுவதும் சரியாகாது. எழுத்து தன் வயதுக்கேற்ற ஆளுமையை சாதனையாகப் பெறக்கூடுமானால்தான் அதன் வாழ்வு நாட்கள் முக்கியமானதாகும். குறிப்பிடத்தக்கதாகும். எழுத்துக்கு ஆளுமை என்று எந்த அர்த்தத்தில் கூறுவது கணிப்பது? முதலில் அதுக்கு ஒரு தனித்தன்மை இருக்க வேண்டும். மற்றவைகளிலிருந்து மாறுபட்டு ஒலிக்கும் ஒரு தொனி இருக்க வேண்டும். அந்தத் தொனியும் எடுப்பானதாக இருக்க வேண்டும். அதோடு திட்ட வட்டமான நிச்சயமான முக்கியத்துவம் வாய்ந்த, பொருட்படுத்தத் தக்க பொருள் கொண்டதாக இருக்க வேண்டும். அதோடு முத்திரை இட்ட குணம் கொண்டதாக இருக்கவேண்டும். இவை எல்லாம் சேர்ந்துதான் ஒன்றை தனித்து தூக்கிக்காட்டும்.

இந்த குணங்களை வைத்து எழுத்துவின் பத்தாண்டுகால 114 ஏடுகளை மொத்தமாக பார்த்ததில் தெரியவருவது என்ன? எழுத்துவில் இதுவரை வெளியாகி இருக்கும் ஏறக்குறைய 500 கட்டுரைகளும், 700 கவிதைகளும் மற்றும் சிறுகதைகள், மதிப்புரைகளும் இதர அம்சங்களும் பொருட்படுத்தத் தக்கனவா? விமர்சனத்துறையிலும்,

184