பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

கவிதைத் துறையிலும் ஒரு திருப்பம் விளைவித்திருக்கிறதா? வளர்ச்சி, முன்னேற்றம் தெரிகிறதா? இவைகளில் வெளியான கருத்துகளின் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? இவைகளில் தொனித்த படைப்பு அனுபவம் மதிப்புள்ளதாக தற்காலத்ததாக இருந்திருக்கிறதா? இதுமாதிரி எல்லாம் இன்னும் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு பதில் கிடைக்கிறதா எந்த மாதிரியான பதில் என்று பார்க்க வேண்டும். இந்த சிறிய தலையங்கத்தில் நாம் கேள்விகளைத் தான் எழுப்பியிருக்கிறோம், பதிலை நாம் சொல்வதைவிட ‘எழுத்து'வோடு ஆரம்ப முதல் தொடர்பு கொண்ட வாசகர்கள்ஆராய்ந்து பார்க்க வேண்டும். தங்கள் கருத்தையும் தெரியப்படுத்தும்படியும் கேட்டுக'கொள்கிறோம்.

ஆனால் இதை மட்டும் நாம் சொல்லமுடியும். விமர்சனம் புதுக்கவிதைத்துறைகளில் 1958க்கு முன் அதாவது 'எழுத்துவருமுன் இருந்த சூழ்நிலையையும், சாதனையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எழுத்துவின் பாதிப்பு நன்றாகத் தெரிகிறது. புதிதாக வெளிவரும் பத்திரிகைகளில் வரும் விமர்சனக் கட்டுரைகளும், சென்னையிலும் மற்ற இடங்களிலும் உள்ள வாசகர் சங்கங்கள் நடத்தும் கூட்டங்களில் பேசி, எழுதி வெளியாகும் பேச்சு, கட்டுரை கருத்துக்களும் எழுத்துவின் பாதிப்பை நிரூபிப்பவை. ஒரு அன்பர் ‘மணிக்கொடிகால' கட்டத்திற்குபின் எழுத்து தான் கால கட்டமாக அமைவது என்று குறிப்பிட்டதுபோல், 'எழுத்து'வின்சாதனை ஆகும். இதில் நமக்குக் கொஞ்சம் திருப்தி. கொஞ்சம் என்றதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். 'எழுத்து'க்கு ஆதர்சமாயும் அதன்முதல் ஏடுமுதல் படைப்புத் தொடர்புகொண்டும் புதுக்கவிதைத்துறையில் 'எழுத்து'வில் வளம் பெருக மூலகாரணமாவும் இருந்து வரும் பிச்சமூர்தியும் 'எழுத்து'வின் பத்தாண்டுப்போக்கு, சாதனை பற்றி கொஞ்சம்தான் திருப்தி தெரிவிக்கிறார்.

‘தீபம்’ பேட்டியில் 'எழுத்து' இலக்கியவட்டம், போன்ற பத்திரிகைகள் இத்துறையில் (விமர்சனத்துறையில்) செய்துள்ள முயற்சி போதாது என்று கூறியிருக்கிறார். அவர் அபிப்பிராயத்தை நாம் மதிப்போடு ஏற்றுக் கொள்கிறோம். விமர்சனம் சம்பந்தமாக இந்தப் பத்தாண்டு காலத்தில் ஒருஆரம்பம் செய்திருக்கிறது எழுத்து. அது நல்ல ஆரம்பமாக இருக்கிறது என்று தான் கருதுகிறோம்.

185