பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


பரமசிவன் போல் அவர்கோபத்தின் ப்ரபையுள் நின்றார் என்று எனக்குத் தோன்றிற்று. முதல் தாக்கம்.

ஒற்றை நாடித்தேகம், கதர் அரைக்கைசொக்காய், கதர்வேட்டி, கையில் எப்பவும் ஒரு துணிப்பை, அனேகமாக அதில் புத்தகங்களும் எழுதுகோலும் தானிருக்கும். சற்று குறுகலான நீண்ட முகத்தில் குழிவான கண்களில் கோபம் பறப்பதாக என் எண்ணம். அந்த நாளைப்பற்றிப் பேசுகிறேன். செல்லப்பா மன்னிக்கனும்.

அப்போது வை. கோவிந்தன் வெளியிட்டுவந்த சக்தி மாதப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த தி.ஜ.ர என் கதைகளை வெளியிட்டு வந்தார். அடுத்து அந்தக் கூட்டத்தில் என் எழுத்து, பொதுவாகவோ குறிப்பிட்டோ அடிபடும் போதும் செல்லப்பாவின் அபிப்ராயம் மாறவில்லை. என்கதைகளைப் பற்றி அவரிடம் நான்வாதிக்கவில்லை. அந்த அளவுக்கு எனக்குத்துணிச்சல் ஏது? என் பயம்தான் அதிகரித்து கொண்டுவந்தது.

பிறகு ஒரு சமயம் புதுக்கதையுடன், 'சந்திரோதயம்' (ஆசிரியர் க.நா.சு) ஆபீசுக்கு சென்றபோது அங்கு ஆசிரியர்குழுவில் செல்லப்பா உட்கார்ந்து கொண்டிருக்கிறார் கதையைக் கொடுத்துவிட்டு, சரி என் கதை வெளிவந்தாற் போலத்தான் என்று நினைத்துக் கொண்டே வெளியேறினேன். என்தப்பான எடைக்கும், என்சின்னத்தனத்துக்கும் அத்தாட்சி வேறே வேண்டாம்’ என்றுதன்னையே கடிந்து கொள்ளும் லா.ச.ரா அப்புறம் நடந்தது என்ன என்பதையும் தொடர்ந்து கூறி இருக்கிறார்.

“அபூர்வ ராகம் சந்திரோதயத்தில் வெளிவந்தது பெரிதல்ல.

வந்த சுருக்கில், திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோட்டில் செல்லப்பாவை சந்திக்க நேர்ந்தது. அதே சாலையில் பத்து நிமிடத்துக்கு முன்தான் ந.சிதம்பரசுப்ரமணியத்துடன் பேசினேன்.

செல்லப்பா கதையைப் பாராட்டினார். அவர் பாராட்டிய வாசகம் ஞாபகமில்லை. ஆனால் முடிவில் சொன்ன வார்த்தைகள் இன்னமும் நினைவில் ஒலித்துக் கொண்டிருக் கின்றன.

"என்ன ராமாமிர்தம், வாழையிலை ஏட்டில் அல்வாத் துண்டைப் பறிமாறிவிட்டு அதில் முடி அகப்பட்டாற் போல கதை

192