உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

செல்லப்பா தானே சொந்தமாக இலக்கிய விமர்சனத்துக்கு என்று ஒரு பத்திரிகை நடத்தத் துணிந்தார். அதற்கு வித்தியாசமாக - அதுவரை எவரும் எண்ணாத விதத்தில் - எழுத்து என்று பெயர் வைத்தார். இதற்காகப் பலரும் அவரைக் கேலி செய்தார்கள்.

'இதில் என்ன தவறு இருக்கிறது? இங்கிலீஷில் ரைட்டிங், நியூரைட்டிங் என்றெல்லாம் பெயர்வைத்து இதழ் நடத்தவில்லையா? அதே மாதிரிதான் இதுவும்' என்று செல்லப்பா பதிலளித்தார்.

அவர் காட்டிய வழியில் பின்னர் பலரும் பத்திரிகைகளுக்கு வித்தியாசமான பெயரை வைக்கத்துணிந்தார்கள். நடை, கசடதபற, ங, ஐ, அஃ என்றெல்லாம்.

உண்மையான சிறுபத்திரிகை (லிட்டில் மேகசின்) நடத்துவதிலும் செல்லப்பாதான் முன்னோடியாய், வழிகாட்டியாய் செயல்பட்டிருக்கிறார். “எழுத்து பத்திரிகை கடைகளில் விற்பனைக்குக் கிடைக்காது. சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். குறிப்பிட்ட குறைந்த எண்ணிக்கையில் தான் பிரதிகள் அச்சிடப்படும்' என்று அறிவித்துக் கொண்டு, அவ்விதமே செயலாற்றினார். பன்னிரண்டு வருட காலம் அப்படி, தனித்தன்மை உடைய ஒரு பத்திரிகையை நடத்தியது மாபெரும் சாதனையாகும்.

அதற்காக அவர் அனுபவித்த கஷ்டங்களும் நஷ்டங்களும் அதிகமாகும். பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பதற்காக அவர் ஊர்ஊராக அலைந்து திரிந்தார். ரயிலிலும், பஸ்சிலும், நண்பர்களின் சைக்கிள் பின்னால் அமர்ந்தும், நடந்தும் போய், படிப்பில் ஈடுபாடு உடைய அன்பர்களை அணுகி, எழுத்து பத்திரிகை பற்றி எடுத்துச் சொல்லி செல்லப்பா இதழை வளர்க்கப் பாடுபட்டார். அது இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம்பெறுவதாகும். அந்தப்பத்திரிகையே தனி இலக்கிய வரலாறு ஆகத் திகழ்வதும் ஒரு விசேஷம் ஆகும்.

அதே போல் தான் அவர் புத்தக வெளியீட்டில் ஈடுபட்டதும். வணிகப் பிரசுரகர்கள் தனது எழுத்துக்களை புத்தகமாக வெளியிட முன்வரவில்லை என்றதும், தானே தன்னுடைய எழுத்துக்களை நூல்களாக்குவது என்று செல்லப்பாதீர்மானித்தார். அதற்காக 'எழுத்து

13