பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்


ஒரு காலத்தில் 'செல்லப்பா நமது கதைகளைப் பாராட்டி ஒரு வரி சொல்லமாட்டாரா' என்று லா.ச.ரா ஏக்கத்துடன் காத்திருந்தார். அதே செல்லப்பா - லா.ச.ரா கேட்காமலே - அவர் எதிர்பாராமலே அவரது கதைகளை விமர்சித்தார். அதுபற்றி செல்லப்பாவே சொல்வதைக் கேட்போம். -

"லா.ச.ராமாமிருதம் சிறுகதை தொகுப்பு ‘இதழ்கள்' என்ற புத்தகமாக வெளிவந்திருந்தது. அதில் உள்ள இதழ்கள்-6 என்ற கதையை விமர்சித்து நீண்ட கட்டுரை சு.மி.யில் எழுதினேன். விமர்சனம் செய்பவனுக்கு ஏதாவது ஒரு அர்த்தமுள்ள மதிப்பு உள்ளகொள்கைப்பார்வை இருக்கக்கூடும் என்று பொதுவாக கருதப்படுகிறது. எனக்கு அத்தகைய, என்னை ஒப்படைத்துக் கொண்ட (கமிடெட்) பார்வை (அப்ரோச்) எதுவும் கிடையாது. கதையின் நயம்தான் எனக்கு முக்கியமானதாகப் பட்டது. எனவே கதையின்நயத்தன்மைகளைநுட்பமாக ஆராய்ந்து எழுதினேன். இந்த நுட்பமான ஆராய்வுக்கு (அனலிடிகல் மெதேடு) ஆய்வுமுறை விமர்சனம் என்று.ஆங்கிலப்பெயர். எனவே செயல்வழி (பிராக்டிகல்) விமர்சனத்தில் ஒரு பிரிவான ஆய்வு விமர்சன முறையை கடைப்பிடித்தேன்.

- என்கிறார் செல்லப்பா.

இனி செல்லப்பாவுக்கு எழுத்து’ என்ற விமர்சன ஏட்டைத் தொடங்கும் எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம்.

“அதை அடுத்து ஒவ்வொரு முதன்மை சிறுகதை எழுத்தாளர்களின் சிறந்த கதைகள் ஒவ்வொன்றையும் அதே உத்தி பாணியில் எழுத இருந்தேன். அதற்குள் பத்திரிகை பொறுப்பாசிரியர் மாறிவிட்டார். எனவே தொடரவில்லை. அதன் பின் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில். கு.ப.ரா. கதைகள் 'புதுமைப்பித்தன் கதைக்கரு' ஆகிய கட்டுரைகளை 1957) படித்தேன். அதிலும் தொடர்ந்து பேச, கட்டுரைப் படிக்க இருந்தேன். அதுவும். நடக்கவில்லை. பத்திரிகைகளிலும் சரி, சங்கங்களிலும் சரி திடீரென அக்கறை ஒன்றில்தோன்றும்,திடும்மென.ஆர்வம் குன்றிவிடும். நாள் கழித்து 'கமலாம்பாள்சரித்திரம்' நாவல் பற்றிய கட்டுரை படித்தேன். முற்போக்கு பத்திரிகைதாமரையில் 'இன்று தேவையான உரைநடை’ அதே ஆண்டில் எழுதினேன். இவை யாவும் எழுத்து ஆரம்பிக்கு முன்

195