பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

 எப்படியோ இடம் பிடித்துக் கொண்டது. என் பத்திரிகை கவனம் இதிலும் ஈடுபட்டது.

- என்பதாக 'எழுத்து' பிறந்ததற்கான உந்து சக்திகளாக இருந்ததைப்பற்றி விவரித்திருக்கிறார் செல்லப்பா.

இன்று எழுத்தும் இல்லை; செல்லப்பாவும் இல்லை. எனினும் ‘எழுத்து’ போன்ற சிற்றிதழ்கள் -செல்லப்பாவுக்கு இருந்த நோக்கங்கள் - அவைகளை அடைவதற்காக அவர் பட்ட சிரமங்கள் ஆகியவைகளோடேயே நடத்தப்பட்டு வருகின்றன.

இன்று சிற்றிதழ்களை நடத்துபவர்கள் செல்லப்பா போல 2000 பிரதிகளுக்கு மேல் அச்சிடமாட்டோம் என்று பிரதிக்ஞை எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. என்றாலும் செல்லப்பா காலம் போலவேதான் இன்றைய வாசகர்களும் இருக்கிறார்கள். சிற்றிதழ்களின் விற்பனை குறைந்த பட்சமாக ஒரு 10 ஆயிரத்தையாவது எட்டுமா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது.

செல்லப்பா காலத்தில் இருந்ததை விட சிற்றிதழ் நடத்துவோரிடை குழு மனப்பான்மையும் பல மடங்கு அதிகமாக இருக்கிறது.

குழுமனப்பான்மை காரணமாக தமக்கு ஏற்பட்ட வேதனைகள் பற்றி செல்லப்பாவே மனம் வருந்திக் கூறி இருக்கிறார்.

'எழுத்து'வின் இளமைக் காலத்தில் 'எழுத்து'டன் எழுத்துறவு கொண்டிருந்த ஒரு சிலர் எழுத்து தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளாமல் இலக்கியத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டது தன்னைக் குறுக்கிக் கொண்டதாகும் என்று முடிவு கட்டிக்கொண்டு அது தங்களுக்குப்போதாது என்று தீர்மானித்து 'எழுத்து'டன் வேற்றுமைகாட்டி 'எழுத்து' விடமிருந்து பாதை பிரிந்து சென்றார்கள். தங்கள் நோக்கத்திற்கு ஏற்ப புதிய பத்திரிகைகளைத் துவக்கும் திட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அவர்கள் செய்தது சரிதான். கூட்டுக்குள் இருக்கும் வரை குஞ்சுக்குத் தாய் வேண்டும். இறக்கை முளைத்து பறக்க முடியவும் தன் வாழ்க்கையை தானே தேடிக்கொள்வது இயல்பு தானே.

197