பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————-எழுத்து - சி.சு. செல்லப்பா


என் 'எழுத்து'க்கும் மேலாகவே அவர்கள் முயற்சி இருக்க வேண்டும் என்று தான் நானும் விரும்பினேன்.

இதை நிறைவேற்ற நடைமுறையில் அவர்கள் ஆக்க ரீதியாக செயல்படுவதுதான் அவர்கள் உத்தேசமாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் செய்யும் புதிய முயற்சிகளுக்கு ஆதரவாகக் காட்ட 'எழுத்து' பற்றியும் என் ஆசிரியப் போக்குபற்றியும் குறைகளை சிருஷ்டித்துக்கொண்டு அவற்றைத்தேவை இல்லாமல் பிரச்சாரம் செய்ய முற்பட்டார்கள்"

-என்று வருத்தத்துடன்-அதே சமயம் தம்மைப்பிரிந்து சென்று தன் மீது தாக்குதல் நடத்தியவர்களின் முயற்சி பற்றி ஒரு தாயின் உள்ளத்தோடு குறிப்பிட்டிருக்கிறார் செல்லப்பா.

எனினும் எத்தகைய பிரிவுகள் விமர்சனங்களாலும் செல்லப்பாவின் 'எழுத்துக்கு' இலக்கிய விமர்சன உலகிலும் புதுக்கவிதை இயக்க வரலாற்றிலும் உள்ள முதலிடத்தை 'இல்லை’ என்று ஆக்கிவிட யாராலும் முடியவில்லை.

செல்லப்பா காலமாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த நடைவழிக்குறிப்புக்கள் என்ற நூலில் அதன் ஆசிரியர் சி.மோகன் (இவர் இலக்கிய உலகில் வயல் மோகன் என்று அழைக்கப்படுபவர்) - 'எழுத்து'வின் பணிகள் சிற்றிதழ்கள் வளர்ச்சியில் அதன்பங்கு பற்றி எழுதியிருக்கிறார்.

‘தற்காலத் தமிழிலக்கிய வரலாற்றில் தனித்துவமிக்க தனிப்பெரும் இயக்கம் 'எழுத்து' சிறு பத்திரிகை என்ற கருத்தாக்கத்துக்கும் அதன் உண்மையான அர்த்தத்துக்கும் செம்மையான வடிவம் கொடுத்த இதழ்.

தற்காலத் தமிழ் இலக்கியப் பரப்புக்கு விரிவும் ஆழமும் அமைத்துக் கொடுத்த களம்.

இவ்வியக்கம் நிர்மாணித்த பரப்பிலிருந்து விரிந்து புதிய எல்லைகளை அகலப்படுத்தி செழுமையுற்றதுதான் அதனைத் தொடர்ந்து இன்று வரை நீடிக்கும் சிறுபத்திரிகைச் சூழல்.

‘பதினோரு வருடங்கள் நீடித்து நிலைபெற்று வலுவான தாக்கத்தை நிகழ்த்திய இவ்வியக்கத்தை கட்டமைத்த அபார சக்திதான்

198