பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

இரண்டாவது ஆண்டின் இரண்டாவது இதழிலிருந்து தான் அதாவது 14ஆவது இதழிலிருந்துதான் அது புதுக்கவிதை வளர்ச்சிக் கான ஒர் இயக்கமாகவே மாறிஇருக்கிறது.

புதுக்கவிதை இயக்கமாகவே செயல்பட்ட ஏடு என்று சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள 'எழுத்து' பற்றிய விமர்சனத்தில் அந்தப் பதினாலாவது இதழிலிருந்து 119ஆவது இதழ் வரையில் விமர்சனம் இல்லாவிட்டால் இந்த முயற்சிக்கு பரிபூரணமாக நிறைவு ஏற்படாது.

எழுத்து புதுக்கவிதைக்கு ஆற்றிய பணிகள் குறித்து ஏற்கனவே வ.க. அவர்கள் “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற விமர்சன நூலில் மிகச் சிறப்பாக சுட்டிக் காட்டி இருக்கிறார்.

எனவே புதுக்கவிதை ஏடாக மாறிய பின்னர்வெளிவந்த எழுத்து ஏடுகள் பற்றி - அவர் எழுதிய ‘பொன்மலர் நாற்ற முடைத்து' என்பதுபோல அவர் எழுதிய விமர்சனத்தையே இங்கே மீண்டும் மறுபிரசுரம் செய்து விடுவதுதான் பொறுத்தமாக இருக்கும் என்று கருதி - பெரியவரிடம் சொல்லி - அவருடைய அனுமதியையும் பெற்றேன். இந்த நூலின் இன்னொரு பகுதியில் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி போலவே வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய விமர்சனம் இணைக்கப் பட்டிருக்கிறது.

‘எழுத்து' செல்லப்பா பற்றி மிகச்சிறப்பானதொரு விமர்சனத்தை லா.ச.ரா எழுதியிருக்கிறார். 'குங்குமம்' வார இதழில் வெளிவந்த அந்த விமர்சன கட்டுரையின் இறுதிப் பகுதியில் இதை விடச் சிறப்பாக எழுத்து - செல்லப்பா பற்றி நம்மால் சொல்ல முடியாது என்கிற அளவுக்கு அமைந்துள்ள அந்த விமர்சனத்தின் கடைசிப் பகுதியை அப்படியே தருவது -இந்த விமர்சன முயற்சிக்கு நிறைவு தருவதாக இருக்கும்.

செல்லப்பா பிடிவாத குணம் படைத்தவர். இதற்கு ருசு வேறெங்கும் தேட வேண்டாம். பத்து வருடங்கள் எழுத்துப் பத்திரிகையை நடத்தினாரே அது போதாதாது? பொழுது போக்கு அம்சம் ஏதுமில்லாமல் முழுக்கவே விமர்சனத்துக்கென்றே ஆன பத்திரிகை. இதனுடைய வெற்றி நிச்சயம் வியாபாரரீதியில் இல்லை. முழுப்பொழுதை எழுத்தாக்கிக் கொண்டவனுக்கு தினமும் சோதனையான அந்நாளில் (இப்போது மட்டும் என்ன வாழ்ந்தது)

201