பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்



உடனடியாகவே இலக்கியப்படைப்பு பற்றிய தனது அக்கறையையும் பிரஸ்தாபித்திருக்கிறது.

'கருத்துக்களைச் சொல்வதைப் பற்றி அதிகம் பிரஸ்தாபித்து இருப்பதால், இலக்கிய படைப்பு சம்பந்தமாக 'எழுத்து' தனக்கு எல்லைக் கோடிட்டுக் கொண்டுவிடும் என்பதல்ல. சொல்லப் போனால் படைப்புதான் எழுத்துக்கு அக்கறையாக இருக்கும்'. என்றும்.

‘இலக்கிய அபிப்பிராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துக்களுக்கும் களமாக எழுத்து அமைவது போலவே, இலக்கியத்தரமான எத்தகைய புது சோதனைகளுக்கும் எழுத்து இடம் தரும்' என்றும் தெளிவுபடுத்திக் கொண்டது.

‘சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயல்கிறவர்களின் படைப்புக்களை வரவேற்பது, என்பதை எழுத்து தனது லட்சியமாக வரித்துக்கொண்டது.

அதனால், கவிதைத் துறையில் புதுக்கவிதைக்கு அது இடம் அளிக்க முன் வந்தது.

முதல் இதழில், ந.பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக் கடை நாரணன், என்ற கவிதை வெளி வந்தது. அது எழுத்துக்காக விசேஷசமாக எழுதப்பட்டது அல்ல. பங்கீட்டு முறை அமுலில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கவிதை.

எப்படியும் பிழைப்பது என்று துணிந்து விட்ட நாரணன் பெட்டிக் கடை வைத்து, ஏற்றம் பெற்று, மளிகைக் கடை முதலாளி ஆகி, மண்ணெண்ணெய் பங்கீடு, அரிசிப் பங்கீடு ஆகியவற்றின் துணையோடு பெரும் பணக்காரன் ஆனதை அழகாக வர்ணிக்கும் கவிதை. வாழத் தெரிந்தோர் கையாளும் யுக தர்மங்களையும் அவர்களுடைய ‘வாழ்க்கை நோக்கை'யும் சுவையாகவும், கிண்டல் தொனியோடும் இக்கவிதை எடுத்துச் சொல்கிறது.

க.நா. சுப்ரமண்யம் கவிதைகள் இரண்டு, 'கவிதை' என்ற சொந்தப்படைப்பும், 'ஆங்கிலக்கவி ஒருவர் எழுதியதைப் பின்பற்றி' எழுதப்பட்ட வர்ணம்’ என்பதும் - வந்திருந்தன.

205