பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


அதனால்
தான் நானும் கவிதை எழுதுகிறேன்.
மனிதனுக்குக் கலை எதுவும் திருப்தி தராது.
மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத்தான்
தரும்.கலையின்
பிறப்பு
இந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே
இன்னமும் உயிர்வைத்துக் கொண்டிருப்பது
இந்த அடிப்படையில்தான் சாத்தியம்
என்று சொல்லலாம்.

'எழுத்து' முதல் ஏட்டில் தந்த கவிதைகளைப் பார்த்துவிட்டு தி.சோ. வேணுகோபாலன், டி.கே. துரைஸ்வாமி, 'பசுவய்யா என்ற பெயரில் சுந்தர ராமசாமி ஆகியோரும் கவிதைகள் எழுத முற்பட்டார்கள்.

‘கவி - வேதனை என்ற வேணுகோபாலன் கவிதை 2-வது ஏட்டில் இடம்பெற்றுள்ளது. பிறகு,9,11ஏடுகளில் 'நான்கவியானேன்' 'வெள்ளம்’ எனும் கவிதைகள் வந்துள்ளன.

துரைஸ்வாமியின் கவிதைகள் (காத்தபானை, கடன்பட்டார் சிலை) 3, 4, 5 ஏடுகளில் பிரசுரமாயின.

புதிதாகத் கவிதை எழுதியவர்களில் ‘பசுவய்யா' கவிதைகள் புதுமையும் தனித்தன்மையும் பெற்று விளங்கின. மூன்றாவது இதழில் வெளியான 'உன் கை நகம்' குறிப்பிடத்தகுந்தது.

நகத்தை வெட்டியெறி - அழுக்குச் சேரும்
நகத்தை வெட்டியெறி - அழுக்குச் சேரும்.

அகிலமே சொந்தம் அழுக்குக்கு!
நகக் கண்ணும் எதற்கு அழுக்குக்கு!

'பிறாண்டாலாமே - எதிரியைப்
பிறாண்டலாமே?'
பிறாண்டலாம்,பிடுங்கலாம்,
குத்தலாம், கிழிக்கலாம்.

208