பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

ஆரத் தழுவிய
அருமைக் கண்ணாளின்

இடது தோளில்
ரத்தம் கசியும்.

வலது கை நகத்தைவெட்டியெறி - அல்லது
தாம்பத்திய பந்தத்தை விட்டுவிடு.

தூக்கி சுமக்கும்
அருமைக் குழந்தையின்

பிஞ்சுத் துடைகளில்
ரத்தம் கசியும்.

இடது கை நகத்தை வெட்டியெறி அல்லது
குழந்தை சுமப்பதை விட்டுவிடு.

நகத்தை வெட்டியெறி - அழுக்குச் சேரும்.
நகத்தை வெட்டியெறி - அழுக்குச் சேரும்.

‘குறும்பை தோண்டலாமே - காதில்
குறும்பை தோண்டலாமே?”

குறும்பை தோண்டலாம்
குறும்பை தோண்டலாம்

குறும்பைக்குக் குடியிருப்பு
குடலுக்குக் குடிமாற்றம்
குருதியிலும் கலந்துபோம் - உன்
குருதியிலும் கலந்துபோம்.

நகத்தை வெட்டியெறி - அழுக்குச் சேரும்.
நகத்தை வெட்டியெறி - அழுக்குச் சேரும்.

இவ்வாறு புதிய நோக்கும் போக்கும் பெற்ற பசுவய்யா தொடர்ந்து கவிதை எழுதினார். கதவைத் திற, வாழ்க்கை, மேஸ்திரிகள், என் எழுத்து என்பன' 'எழுத்து' முதல் வருட ஏடுகளில் வெளி வந்துள்ளன. -

கருத்தாழம் கொண்ட 'மேஸ்திரிகள்' என்ற கவிதை மிகுதியும் ரசிக்கத் தகுந்தது.

209