பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

1

பல்கலைக் கழகத்தின்
முன்னொரு தோட்டம்
தீட்டினார் மேஸ்திரி
அற்புதத் திட்டம்

2

திட்டம் விளைந்தது
தோட்டம் மறைந்தது
காட்சி தந்தது
மிருகக் காட்சாலை

3

தோட்டத்திலே மேஸ்திரி ஒருவரே
எண்ணத் தொலையுமோ உள்ளே?

'எழுத்து' புதுக் கவிதை முயற்சிகளுக்குத் தந்த ஆதரவைக் கண்டு உற்சாகம் பெற்று, மா. இளையபெருமாள், கி.கஸ்தூரிரங்கன், சி.பழனிசாமி, சக்ரதாரி, சுப.கோ. நாராயணசாமி ஆகியோரும் இவ்வருடத்தில் கவிதைப் படைப்பில் ஈடுபட்டார்கள். எல்லாம் ரசிக்க வேண்டிய - பாராட்டுதலுக்கு உரிய படைப்புகளே யாகும்.

“எழுத்து" 14-வது ஏட்டிலேதான் ஆசிரியர் ‘புதுக்கவிதை’ பற்றி பிரஸ்தாபிக்கத் துணிந்துள்ளார்.

‘பழங்கவிதை புதுக் கவிதை என்று அதிகம் இப்போது பாகுபடுத்திப் பேசிக் கொள்கிறோம். புதுக்கவிதை முயற்சிகள் என்று ஒருவகைகவிதைகளுக்குப் பெயர் சூட்டி அதற்கு இடம் தருகிறோம். தமிழ்க் கவிதையைத் தனியான ஒரு பாதையில், திருப்பி விட்ட பாரதியின் தனித்தன்மையை ஏற்றுக் கொண்ட பின், அதற்குப் பிறகு அவ்வப்போது தோன்றும் ஆற்றல்கொண்டவர்களது சோதனைப் படைப்புகளுக்கும் ஒரு அந்தஸ்து, ஒரு இடம் இருக்கிறது. ஆனால் இந்தப் புது கவிதை முயற்சி எந்த அடிப்படையில் எந்த அளவுக்கு பழங் கவிதையிலிருந்து மாறுபட்டு நிற்கிறது என்பதை எல்லாம் ஆராய்வதற்கானஅளவுக்கு புதுக்கவிதை வளம் பெருக வில்லை என்ற ஒரு நினைப்பும் இருந்துவருகிறது. இந்த ஏட்டில் பிச்சமூர்த்தி வசன கவிதை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இன்று புதுக்கவிதை சோதனை ஆரம்பித்து வைத்த முதல்வர் பிச்சமூர்த்தி புதுக் கருத்துக்கள் ஆதாரத்துடன் அழுத்தமாக ஆராய்ந்து கூறப்பட்டுள்ளகட்டுரை அது."

210