பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


கொள்ளச் செய்கிறது. வசனம் லோகாயத உண்மையை அடிப்படையாகக்கொண்டது. கவிதை மன நெகிழ்ச்சியை, மன அசைவை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால் வசனத்தை கவிதையைப் போல் செயல்படுத்த முடியாதா? கூடாதென்ற நியதி உண்டா? இல்லை. அம்மாதிரி செயல்படும் பொழுது வசனம் தன் தொழிலை விட்டுக் கவிதையின் தொழிலை ஏற்றுக் கொண்டு விடுகிறது என்றுதான் ஏற்படும். பார்வைக்கு வசனம், உண்மையில் கவிதை.

மற்றொரு விஷயம். இப்பாகுபாடு தெளிவை உத்தேசித்து செய்யப்பட்டதே ஒழிய நிரந்தரமானதென்று கருதக் கூடாது. நோக்கத்தினால் அவை பாகுபாட்டைச் சேர்ந்த தன்மையோ மற்றொரு பாகுபாட்டைச்சேர்ந்த பெருமையையோஅடைகின்றன. ஜுரத்தில் வேகம் ஏறுவதுபோல் உணர்ச்சி கூடினால் தரையில் நடக்கும் வசனம் சிறகு பெற்றுக் கவிதையாகி விடும்.

ஒரு உதாரணத்தைக் கொண்டு பார்ப்போம். பாரதியார் காட்சி’ என்ற தலைப்பில் சில வசன கவிதைகளை இயற்றித் தந்திருக்கிறார்.

‘இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை உடைத்து. காற்றும் இனிது. தீ இனிது. நிலம் இனிது. ஞாயிறும் நன்று. திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.”

என்று முதல் கவிதை தொடங்குகிறது.

இது வசனமா? தர்க்க அறிவுக்கு என்ன புரிகிறது. கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோலல்லவா இருக்கிறது. சுருதி பேதமாக அல்லவா இருக்கிறது. ஆம் வசன ரீதியாகப் பார்த்ததால் விளைந்த வினை இது. இது கவிதை. செய்தி சொல்ல வந்த,விஞ்ஞானத்தை விளக்க வந்த வசனமல்ல. சிருஷ்டியின் அனுபவத்தைக் கூறும் உணர்வுள்ள சொற்கள்.

எனவே வசனம் கவிதையாக முடியாதென்று முன் கூட்டியே முடிவு செய்வது தர்க்கத்திற்கு ஒவ்வாது. மனிதனுடைய மொழிகள் அடைந்துள்ள மாறுபாட்டையும். கவிதை என்னும் துறை அடைந்துள்ளவளர்ச்சியையும் சரித்திரரீதியாக உணராதகுற்றம்தான் இம்மாதிரி அபிப்பிராயங்களுக்குக் காரணமாகிறது.

202