‘எழுத்து பிரசுரம்' நூல்களை விற்பனை செய்வதற்கும் செல்லப்பா மிகுந்த சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. வணிக நோக்குப் பதிப்பகத்தினரும் விற்பனையாளர்களும் அவ் வெளியீடுகளை விற்றுத் தருவதற்குத் துணைபுரியவில்லை.
‘இந்த மாதிரிப் புத்தகங்கள் எல்லாம் விலைபோகாது’ என்று கூறி அவற்றைத் தங்கள் விற்பனை நிலையங்களில் வைத்துக் கொள்ளவே. மறுத்தார்கள். விற்க முயல்வதாகச் சொல்லி புத்தகங்களைப் பெற்றுக்கொண்ட சிலரும் அவற்றை ஒரு மூலையில் போட்டு வைத்தார்கள். புத்தகம் வாங்க வருகிறவர்கள் பார்வையில்படுகிறபடி எடுப்பாக வைக்க அவர்கள் விரும்ப வில்லை.
பல மாதங்களுக்குப் பிறகு செல்லப்பா போய் புத்தக விற்பனை எப்படி இருக்கிறது என்று கேட்ட போது, ஒன்று கூட விலைபோகவில்லை என்று கூறி, அவரது புத்தகங்களை அவரிடமே திருப்பித் தந்தார்கள். அவை அழுக்கடைந்து காணப்பட்டன.
இதனால் எல்லாம் செல்லப்பா மனம் தளர்ந்து போகவில்லை. 'எழுத்து' பத்திரிகையை ஊர்ஊராக அலைந்து பரப்ப முயன்றதுபோல் 'எழுத்து பிரசுரம்'களையும் நெடுகப் போய் விற்பனை செய்வேன் என்று அவர் உறுதிபூண்டார். தமிழ்நாடு நெடுகிலும் உள்ள கல்லூரிகளின் பட்டியல் ஒன்று தயாரித்தார். பிறகு, மாவட்ட வாரியாகச் சென்று அங்குள்ள கல்லூரிகள், மேனிலைப் பள்ளிகள் அனைத்துக்கும் புத்தகப் பைகளை சுமந்து கொண்டு, உற்சாகம் குன்றாது சென்று முயன்றார். அவரது விடாமுயற்சிக்கு நல்ல பலனும் கிட்டியது.
அப்படி 1974ல் அவர் புத்தக விற்பனைக்காக திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்த போது தான் நானும் அவருடன் சேர்ந்து கற்றினேன்.
புத்தகக் கட்டுகளை திருநெல்வேலி ஜங்ஷனை ஒட்டியுள்ள சிந்து பூந்துறையில், அண்ணாச்சி சண்முகம் பிள்ளை வீட்டில் வைத்திருந்தோம். நாங்கள் இருவரும் ராஜவல்லிபுரம் வீட்டில் தங்கினோம். அதிகாலையில் எழுந்து தாமிரவர்ணி ஆற்றுக்குப்போய்
16