பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்



பஞ்சோ பொறியருகில்?
மலரோ முள்ளின் மேல்?
நஞ்சோ அமுதமாகும்?
நானோ(உ)ன்னருள் பெற்றேன்!

வேறு சிவரும் அபூர்வமாக ஒன்றிரண்டு கவிதைகள் எழுதினார்கள் எனது கவிதைகள் இரண்டு (விஷமும் மாற்றும்; குருட்டு ஈ) 16-வது இதழில் இடம் பெற்றன.

பிச்சமூர்த்தி இயற்கை தரிசனங்களையும் வாழ்க்கை உண்மைகளையும் இணைத்து அவ்வப்போது கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார். சுமைதாங்கி, லீலை, போலி, திறவுகோல், ஸ்விச், மணல் ஆகியவை 1960-61 வருடங்களில் 'எழுத்து' ஏடுகளில் பிரசுரமாயின.

ஜெயகாந்தன் எழுதிய கவிதை ஒன்று (நீ யார் - எழுத்து 32) குறிப்பிடத் தகுந்தது.


நீ யாரென்றேன்
அழுக்கு என்றாய்
பேரேதென்றேன்
பொய் என்றாய்
ஊரே தென்றேன்
இருள் என்றாய்

ஒளியே,
உயிரே,
உயர்வே வா!

அழுக்கின் உருவே அருகில் வா - உனை
அனைத்துக் கொள்வேன் அஞ்சாதே

உலகின் அழுக்கைச் சுமந்தாலும்
உள்ளத் தழுக்கில்லா உருவே
அழுக்கைக் கடந்து வந்துவிட்டாய் - நீ
அழுக்கின் உருவம் கொண்டுவிட்டாய்

227