பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


கூட்டமாக அணிவகுத்து, அசட்டுக் கடுஞ்சிவப்பு நிறத்தாங்கி சிந்திய ரெளத்திரத் துளிகள் போல் தடுத்தோரைக் குதறித் தள்ளி அடுத்த நிமிஷம் சாவதற்கு விரையும் இக் கட்டெறும்புக் கூட்டத்தையும் நாம் அறிவோம்.”

இது கவிதை (புதுக் கவிதை) என்று சொல்வதானால், லா.ச.ராமாமிர்தம் எழுதியுள்ள கதைகள் அத்தனையும் மணி மணியான கவிதைகளே என்று சத்தியம் பண்ண' வேண்டியது தான்!

துரைஸ்வாமியின் 'காத்திருந்தேன்' நல்ல கவிதை, ஒருவனது வருகை நோக்கிக் காத்திருக்கும் ஒரு நபரின் தனிமையை, மன உளைச்சலை, உணர்ச்சிச்சுழிப்புகளை விரிவாகச் சொல்லுகிறது. இது.

‘திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க, ஒருதரம் படிப்பவருக்கும் ஒருவேகம், ஒரு எதிரொலிக்கும் தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப் பிடித்துக்கொள்ளும் ஒரு குணம் இருக்க வேண்டும் புதுக் கவிதையிலே என்று க.நா. சு. வகுத்துள்ள இலக்கணத்துக்கு ஏற்ப இயற்றப்பட்டுள்ளது. 'கொல்லிப்பாவை’

"திரெளபதி அவள்
வந்து போகும் அர்ச்சுனன் நான்'

என்ற வரிகள் விளக்கம் கூறப்பெற்று, திரும்பத் திரும்ப ஒலிக்கின்றன. இக்கவிதையில்.

பேதாபேதம்’ என்றொரு கவிதை. இது வேறு ரகமான சோதனை.

மண்புழு
மண்ணைப்
பொன்னாக்கும்!

இலைப்
புழு
பட்டு நெய்யும்!

மனிதரில்
சிலந்தியும்

பெண்டிருட்
சிதலும்
உண்டு.

232