பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா



மீட்சிபெற இயங்குகிற இயக்கம். இதில் தன் பங்கை இந்த நான்கு ஆண்டுகளாக செலுத்தி வருவதுதான் எழுத்துவின் சாதனை. வாசக அன்பர் குறிப்பிட்டிருப்பதுபோல் எதிர்பார்த்திராததுதான். ஆனால் அது நடந்துவிட்டது. எதிர்பார்த்திருந்தாலும், அதுக்கு மேலாக, ‘எழுத்து பிரசுரம்’ வெளியீடுகளாக வெளி வந்திருக்கும் ‘காட்டுவாத்து’ம் (ந.பிச்சமூர்த்தி) புதுக் கவிதைகள் தொகுப்பும் இதுக்கு சான்று.”

1962-ல் ‘எழுத்து’ ஏடுகளில் வந்த கவிதைகள் பலவும் கருத்து ஆழம், கற்பனை வளம், வாழ்க்கை தத்துவம், மற்றும் நயங்கள் அநேகம் கொண்ட வளமான படைப்புக்களாக விளங்கின. டி.கே.துரைஸ்வாமி, சி.மணி, எஸ். வைத்தீஸ்வரன், தர்மு சிவராமூ, வல்லிக்கண்ணன் அதிகமான கவிதைகள் எழுதியுள்ளனர். தி.சோ.வேணுகோபாலன், கி.கஸ்தூரிரங்கன், மயன் ஒவ்வொரு கவிதை படைத்துள்ளனர். புதிதாகக் கவிதை எழுத முற்பட்டிருந்த பலரது கவிதைகளும் இவ்வருடம் எழுத்து இதழ்களில் இடம் பெற்றன. சி.சு.செல்லப்பாவும், சு. சங்கரசுப்ரமணியனும் கவிதை முயற்சிகளில் உற்சாகத்தோடு ஈடுபட்டனர். ஆங்கிலத்திலிருந்து பல கவிஞர்களின் படைப்புகள் தமிழாக்கப்பட்டு பிரசுரமாயின. ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் மூன்று வந்துள்ளன.

இவ்வருடத்தில்,புதுக் கவிதையில் நெடுங்கவிதை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிச்சமூர்த்தியின் ‘காட்டுவாத்து’ம் சி.மணியின் ‘நரகம்’ கவிதையும் சிறப்பான படைப்புகள்.

‘நரகம்’ விசேஷமானது. இதை வெளியிட்டபோது, 3-வது ஏட்டில் புதுக்கவிதையில் ‘ஒரு மைல்கல்’ என்று தலையங்கம் எழுதி ‘எழுத்து’ பெருமைப்பட்டது.

“எழுத்துவில் இதுவரை வெளிவந்திருக்கும் நூற்றுக்கும் அதிகமான கவிதைகள் புதுக்கவிதையின் சத்தான தாக்கான குணங்களை நிரூபித்திருக்கின்றன. சி.மணியின் ‘நரகம்’ புதுக்கவிதை முயற்சியில் ஒரு மைல் கல்லை நாட்டுகிறது. நீளத்தில் மட்டுமல்ல; உள்ளடக்கம், உருவ அழகு, படிமச் சிறப்பு, வாழ்க்கைப் பார்வை, மதிப்பு, தத்துவ நோக்கு, உத்திகையாளுதல் இத்தியாதிகளில் சிறப்பு விளங்குகிறது. பிரிட்டிஷ் கவி டி.எஸ். எலியட்டின் ‘ஜே ஆல்ஃப்ரட் ப்ரூஃபராக்கின் காதல் கீதம்’, ‘பாழ்நிலம்’ அல்லது குறுங்காவியம்

240