பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

தன்மை, பேச்சு, அமைதி. செம்மை, நூதன படிமப்பிரயோகம் ஆகிய தன்மைகளை கவனித்து கவிதைகளை அமைக்கலானார்கள். டி.இ. ஹாம், எஸ்ரா பவுண்ட், டி.எஸ். இலியட் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். புதிய தொனியும் நூதன நடையும் நவீன படிமப் பிரயோகமும் அவைகளில் தெரிந்தன. விஞ்ஞான, இதர தொழில் துறை தகவல்களை உள்ளடக்கிய குறியீடுகள்; பயனாகும் சொற்கள் பொருத்தப்பட்டு ஒரு புதிய பாணியே தோன்றியது.

ஒரு வரிக்கு இத்தனை சீர் இருந்தால் இந்தரக கவிதை என்று, ஒரு வரியின் நீளம் சம்பந்தமாக ஏற்கெனவே வலிந்து நிர்ணயிக்கப்பட்டிருந்த வரையறுப்பைவிட ஒரு நிறுத்து பேச்சு அல்லது சிந்தனைப் போக்கு அளவைக் கொண்டு சுதாவான வரையறுப்பினால் நிர்ணயிக்கப்படும் ஒரு வரி நீளம் மேல் என்று பிரெஞ்சு சுயேச்சாகவிதை சோதனைக்காரர்கள் கூறியது இவர்களைப் பாதித்தது. அதே சமயம் ஒவ்வொரு வரியும் அடி நாதமாக இடையறாத ஒலிநயம் (ரிதுமிக் கான்ஸ்டென்ட்) கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினதையும் மனதில் போட்டுக் கொண்டார்கள். ஒரே தொகை அசை, சீர்களைப் பயன்படுத்துகிற போது, திரும்பத் திரும்ப ஒரே விதமான ஓசைநய சப்தம்தான் விளைகிறது. மரபான கவிதை இந்த விதமான ஒரு இடையறாத ஓசை நயத்தாலேயே முழுக்க முழுக்க ஆனது. ஆனால் சுயேச்சா கவிதையோ தன் உள்ளடக்கத்துக்கும் பேச்சுக்குரலின் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டு ஏற்பட்டதேவைக்கு ஏற்ப வேறுபடும் ஒரு ஒசைநயத்தை முதன்மையாகக்கொண்டிருக்கும் என்பது அவர்கள் கருத்து. இந்த இடையறாத ஒலிநயத்தோடு அவர்கள் ஒன்றிப்பையும் பாட்டர்ன் என்கிறோமே- ஒருவித 'தினிசு' அதையும் சாதிக்க ஒரு வரிக்குள்ளேயே நிறுத்துகளை அளவமைய அமைத்தல், மோனை, ‘காடென்ஸ்’ என்கிறோமே,குரல் இறக்கம் ஏற்றம், ஒரொரு சமயம் சந்தமும் கூட,ஆகிய சாதனங்களை சிபாரிசு செய்தார்கள். ஆக, மொத்தத்தில், இன்று கவிதை வெளியிட வேண்டியிருக்கிற புதிய விஷயத்துக்கு இடம் கொடுக்க, சந்தக் கவிதைக்கு 'ஒவர் ஹாலிங்’ அதாவது பழுது பார்த்துச் செப்பனிடல் தேவை என்று கருதினார்கள்.

உருவம் விஷயம் இப்படி இருக்க, உள்ளடக்கம் விஷயத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. ஃபிராய்டின் கருத்துக்களால் கவிஞர்களது

246