பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்



மா. இளையபெருமாள் 1.கி.கஸ்தூரி ரங்கன் 2. இ.எல். கந்தசாமி 2. சு. சங்கர சுப்ரமண்யன் 2. எஸ். சரவணபவானந்தன் 1. பெ.கோ. சுந்தரராஜன் 2 பேரை சுப்ரமண்யன் 1. சி.சு. செல்லப்பா 3. தரும சிவராமு 8 டி.கே. துரைஸ்வாமி 4 டி.ஜி. நாராயணசாமி 1 சுப. கோ. நாராயணசாமி சுந்தரராமசாமி 5 ந. பிச்சமூர்த்தி 2 யோ பெனடிக்ட் சி.மணி 3 க.நா.சுப்ரமண்யம் 2 ஞா. மாணிக்கவாசகன் 1 முருகையன் கே.எஸ். ராமமூர்த்தி கு.ப. ராஜகோபாலன் 3, வல்லிக்கண்ணன்4 தி.சோ. வேணுகோபாலன் 6எஸ். வைத்தீஸ்வரன் 5 ஆக 24 கவிகளின் 53 கவிதைகள்.

'கவிதை சொற்களில் இல்லை. ஒலிநயத்தில் இல்லை. கருத்திலே மடை திறக்கும் உணர்வுநெகிழ்ச்சியிலே சுட்டிக்காட்டும் பேருண்மையிலே பொதிந்து கிடக்கிறது என்ற ந.பி.யின் விளக்கத்தை நிரூபிக்கும் அருமையான கவிதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன. இவ்வாறான கவிதைகளிலும் ஒரு ஒலிநயம் இருப்பதை ரசிகர்கள் உணரமுடியும்.

தமிழுக்குப் புதுமையானது இத்தொகுப்பு. இதுபோன்ற தொகுப்புகள் சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தயாரிக்கப்படவேண்டும். அப்போதுதான் கவிதையின் வளமும், வளர்ச்சியும் புலனாக வாய்ப்பு ஏற்படும்.

'புதுக்குரல்கள்' முதல் பதிப்பு வெளியாகி பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்ட பிறகு, இப்போது அதன் இரண்டாம் பதிப்பு பிரசுரமாக வாய்ப்பு கிட்டியது. மதுரைப் பல்கலைக்கழகம் எம்.ஏ.வகுப்புக்கு 'புதுக்குரல்கள்' தொகுப்பை பாடப்புத்தகமாகத் தேர்வு செய்தது. இது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம். ஆகவே, செல்லப்பா அதன் இரண்டாம் பதிப்பை 1973 ஜூலையில் கொண்டுவந்தார்.

இது 'திருந்திய பதிப்பு, முதல் பதிப்பில் இடம் பெற்றிருந்த சில கவிதைகள் நீக்கப்பட்டுள்ளன. சில கவிஞர்கள் அகற்றப்பட்டு புதிதாக மூன்று பேர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். சிலரது கவிதைகளில் முதல் பதிப்பில் அச்சாகியிருந்தவற்றில் சில படைப்புகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போதும் நண்பர் செல்லப்பா 'தன்மூப்பாக' செயல் புரியவில்லை; விமர்சகர் சி.கனகசபாபதியின் ஆலோசனையோடும் உதவியோடும் இத் திருத்தப்பட்ட பதிப்பை உருவாக்கினார் என்று அறிய முடிகிறது.

249