பண விஷயத்தில் செல்லப்பா விசித்திரமான ஒரு கொள்கையைக் கடைப்பிடித்தார். அவருக்கு பணத்தேவை அதிகம் இருந்தது. வாழ்க்கை நடத்துவதற்கும், எழுத்துக்களை புத்தகங்களாக்கி வெளியிடவும் எப்பவும் அவருக்குப் பணம் தேவைப்பட்டது. இருப்பினும், நிறுவனங்களும் நல்மனம் கொண்டோரும் விரும்பி அளித்த பரிசுகளையும் பணத்தையும் அவர் பிடிவாதமாக மறுத்து வந்தார்.
அவருடைய வாழ்நாளில் வெவ்வேறு சமயங்களில் இப்படி பரிசுகள், அன்பளிப்புகள் அவரைத் தேடி வந்தன. எவர் தரினும் சரியே,அவற்றை நான்பெற்றுக்கொள்ள மாட்டேன்; இது என் கொள்கை என அவர் உறுதியாகத் தெரிவிப்பதை வழக்கமாக்கினார். கோவை ஈ.எஸ். தேவசிகாமணி தந்த முதுபெரும் எழுத்தாளருக்கான பாராட்டுப் பணம், சென்னை அக்னி அட்சரவிருது, சிந்து அறக்கட்டளை தமிழ்ப்பணி விருது, இலக்கியச் சிந்தனை தர முன்வந்த ஆதிலெட்சுமணன் நினைவுப் பரிசு... இப்படி பல.
ஒருசமயம், செல்லப்பா உடல்நலம் இல்லாது சிரமப்படுவதை அறிந்த கோவை ஞானி அன்புடன் அவருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பினார். நான் எவரிடமும் அன்பளிப்புப் பெறுவதில்லை என்று எழுதி அதை நண்பருக்கே திருப்பி அனுப்பிவிட்டார். இதையும் செல்லப்பா என்னிடம் சொன்னார். ஞானி ரொம்பகால நண்பர்தான்; ஆனாலும் என் கொள்கையை நான் விடுவதற்கில்லை என்றார்.
1999 மே மாதம் கோவையில் ஞானியைக் கண்டுபேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எங்கள் நண்பரான செல்லப்பாவின் மரணம் குறித்துப் பேசிக்கொண்டோம். அப்போது அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு உபயோகமாக இருக்கும் என்று ஆயிரம் ரூபாய் அனுப்பினேன். அதை அவர் திருப்பி அனுப்பிவிட்டார்.
‘என்னிடம் செல்லப்பா சொன்னார். நீங்கள் பணம் அனுப்பியதையும் சொன்னார். அதை அவர் திருப்பி அனுப்பி
19