பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


அறிந்தறிந்து
தத்துவப் பாகனையே கொல்லும்
யானை அது

இவ்வாறு சிந்தித்து உண்மை ஒளியைக் காண முயல்கிறது மனசு.

காலம் என்ற ஒன்று
யாளியின் வாய்க்குள்
விரலுணர,
ஒசையெழ உருண்டோடும்
கண்ணுக்குப் படாத
கல் பந்து

குறையாத ஜாடியினின்று
நிறையாத ஜாடிக்குள்
பார்வைக்குத் தெவிட்டாமல்
வில்லாய் வளைந்து விழும்
விழுந்து கொண்டேயிருக்கும்
கட்டித் தேன் பெருக்கு

தரைக்கே வாராது
காற்றோடு மிதந்தோடும்
பூப்பந்து

கிணற்றினுள்ளே
கண்ணுக்குப் புலனாகும்
நதியின் பிரவாஹம்

தேயாததை யெல்லாம்
தேய வைத்து,
தேய்மானம் ஒன்றே
தேயாதது என்று
தேய்த்தும் தேயாது
கோலோச்சும்
தேய்மானத் தத்துவம்,

254