பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா



மழை பெய்யும்.
மலை உச்சி மழை நீரை
புவி ஈர்க்க
அது
பேரருவியாகி
கொட்டும்: கொட்டும்
அதனடியில் குளிப்பதும், மகிழ்வதும்
நான் நீ மட்டுமா?
விஞ்ஞான மருமகள்
டைனமோப் பெண்ணாளும்
அருவியில் குளிக்கின்றாள்.
‘குளிக்காமல்' கருவுறுதல்
குவலயத்தில் கண்டதுண்டு.
மருமகளோ
குளித்துக் கருவுருகின்றாள்.
வட்ட வரிசைப் பற்கள்
புளி, மாங்காய் கடிக்கவில்லை.
பச்சரிசி மெல்லவில்லை
வயிற்றில் கனக்கவில்லை,
ஆனாலும்
ஒர் கணத்துள்
பெற்றெடுத்து விடுகின்றாள் -
ஏழு.

பாலுக் கழுதால்
அவளது
தாமிரக் காம்பில்
மின்பால் சுரக்கும்.
டைனமோப் பெண்ணாள்
தன் காந்தக் கண்களினால்
குழந்தைகளை நோக்க,
புத்துலகைக் காண்கின்றாள்.
அனல் கக்கும்
ஒரு குழந்தை

256