——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா
விட்டதையும் சொன்னார். என்ன பண்ணுவது! நான் என் கொள்கைப்படி நடந்து கொண்டேன் என்றும் சொன்னார்.'
‘என் விஷயத்திலும் அவர் அப்படி நடந்து கொள்வார் என்று நான் எண்ணியத்தில்லை. என் மனசுக்கு கஷ்டமாக இருந்தது' என்றார் ஞானி.
அன்பளிப்புகள் விஷயத்தில் மற்றவர்கள் மனஉணர்வுகள் பற்றி செல்லப்பா கவலைப்பட்டதில்லை. அவர் தனது உள்மனசின் குரலுக்கே செவிசாய்த்தார். அதன்படி செயல் புரிந்தார்.
அமெரிக்காவின் குத்து விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு முதல்முறையாக அறிவிக்கப்பட்டு செல்லப்பாவுக்கு வழங்கப் பெற்ற போதும், அவர் அதை ஏற்க மறுத்தார். ஆனால் நண்பர்கள் பணத்தைப்பெற்று அவருடைய எழுத்துக்களை புத்தகமாக வெளியிட உபயோகிக்கலாமே என்று வலியுறுத்தினார்கள். நீங்களே அதைச் செய்யுங்கள் என்று செல்லப்பாகூறிவிட்டார். 'நாடக வெளி’ ரெங்கராஜன் பொறுப்பேற்று, செயல்புரிந்து செல்லப்பாவின் என் 'சிறுகதைப் பாணி' என்ற நூலை வெளிக் கொணர்ந்தார்.
20