பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


“எழுத்து ஏட்டின் தோற்றத்திற்குப் பின்னர், தமிழில் புதுக்கவிதை எண்ணிக்கையில் பெருகியிருக்கிறது. ஆனால் அதன் தரம் பெருகியிருக்கிறதா என்பது சந்தேகம்; விவாதத்திற்குரிய விஷயம்.

என்னைப் பொறுத்தவரையில் இன்று எழுதப் பெறும் பழைய (மரபுக்) கவிதையைப் போலவே புதுக்கவிதையும் எனக்குச் சலிப்பூட்டுகிறது.

புதுக்கவிதையின் புதுப் பாதையை, அதன் சொல்லாட்சி யை, படிமச் சிறப்பை, உருவ நயத்தை நான் ரசிக்கிறேன். இப்படியும் கவிதை வரவேண்டியதுதான் என்று உணர்கிறேன். ஆயினும், புதுக் கவிஞர்களின் குரல்களை என்னால் ரசிக்க முடியவில்லை.

வெறுமை, விரக்தி முனைப்பு, மனமுறிவு ஆகிய குரல்கள் பல புதுக் கவிதைகளின் அடிநாதமாக ஒலிக்கின்றன. நவீன பட்டினத்தார்களாகவும், பத்திரகிரியர்களாகவும் திருமூலர்களாகவும், திகம்பரச் சித்தர்களாகவும் சில புதுக் கவிஞர்கள் மாயாவாதம் (மிஸ்டிசிசம்) பேசுவது, அதுவும் இந்திய வரலாற்றின் முக்கியமான இக்கால கட்டத்தில் அழுது புலம்பிக் கையறு நிலையில் கை விரல்களைச் சொடுக்குவது, எனக்கு மிகவும் பிடிபடாத சங்கதி.

இந்தக் கவிஞர்கள் தமிழ்ச் சொல்லை முறிக்கட்டும். மனித மனத்தை ஏன் சிரமப்பட்டு முறிக்க வேண்டும்? அது தான் தெரியவில்லை. ஐயோபாவம் இவர்களுக்கு என்னககக்கேடு,நோய்?

புதுக் கவிஞர்களின் இந்த மனமுறிவு (மனமுறிப்பு) விவகாரம் பற்றி எழுத்து ஆசிரியர் சி.சு.செல்லப்பா 62 வது ஏட்டில் வரைந்திருப்பது இங்கு நன்கு சிந்திக்கத் தக்கது.

“மாடர்னிட்டியும் நம் இலக்கியமும்' என்னும் 1964 பிப்ரவரி தலையங்கத்தில் சி.சு.செ. கூறுகிறார்.

‘மனமுறிவு - ஃபிரஸ்டிரேஷன் - ஒரு மோஸ்தர் (ஃபாஷன்) இல்லை, இன்னொரு இலக்கிய நோக்கைப் பார்த்து இமிடேட் செய்வதுக்கு. அந்த இடத்து அந்த நாளைய வாழ்வைப் பொறுத்தது. மேற்கே இன்றைய வாழ்வு அதுக்கு உணவூட்டலாம். நம் வட்டாரத்தில் நம் வாழ்வில் அது தொனித்தால் ஒழிய, இலக்கியத்தில்

264