பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

தொனிக்காது. இமிடேட் செய்து தொனிக்கச்செய்தால், அதில் உண்மை இருக்காது. -

ந.பிச்சமூர்த்தி இது பற்றி ஒரு சம்பாஷணையில் சொல்லியது. 'மேற்கே டிஸ்சின்டக்ரேட்டிங் - அதாவது, உதிர்கிற நிலை. எனவே நம்முடையது. ஷேப்பிங் அதாவது, உருவாகிற நிலை, எனவே மனமுறிவு நம் இலக்கியத்தின் பொதுத் தொனியாக இருக்கமுடியாது'.

ந.பி. வாழ்க்கையையும் இலக்கியத்தையும் பிரித்துப் பார்க்க முற்படாதவர். ஏன், இலக்கியத்தை விட வாழ்க்கையே மேலானதாகக் கருதுபவருங்கூட, ந.பி.சொன்னது ஆணி அடித்த கருத்து...

ந.பிச்சமூர்த்தியின் ஆணி அடித்த கருத்தை, அதை அடியொன்றிக் குரல் எழுப்பும் செல்லப்பாவின் கருத்தை, ஏனைய புதுக் கவிஞர்கள் - மாயாவாத மனமுறிவுக் குரல் கொடுக்கும் புதுக்கவிதைத் தம்பிரான்கள்- ஏற்றுக் கொள்வார்களா, அல்லது மனமுறிவு (மனமுறிப்பு)த் தத்துவம் தான் இன்றைய புதுக்கவிதையின் பொதுக்குரலாக விளங்குமா என்பது பொறுத்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

நான் உணர்ந்த வரையில், மிகைப்படக் கூறல், கூறியது கூறல்,மயங்க வைத்தல் ஆகிய சீக்குகள் புதுக் கவிஞர்களிடமும் மலிந்து காணப்படுகின்றன. இந்நோய் விரைவில் அகலக் காலதேவன் அருள்புரிவானாக!”

265