பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தலையங்கம்
அறுபதுக்களில்


வரலாறு தெரிய வந்த காலத்திலிருந்து இன்று வரையில் ஒவ்வொரு பத்தாண்டு காலத்திலும் உலக முழுவதிலும் நடந்திருப்பதை, மனித வாழ்வின் அனுபவத்தை கணித்துப் பார்ப்பதானால் அறுபதுக்களைப் போல் ஒரு பத்து வருஷ காலம் தனிச் சிறப்பானதாக இருக்குமா என்பது சந்தேகம். புராண காலம் தொட்டு இருந்து வந்திருக்கும் ஒருநம்பிக்கை தகர்ந்தது போல மனிதன் கற்பனையிலும் நினைக்க முடியாத ஒரு சாதனையாக சந்திரமண்டலத்தில் தன்காலடி பதிய வைத்துவிட்டான். இது சென்ற பத்தாண்டு காலத்தில் நடந்திருக்கிறது. இந்த எழுபதுக்களில் அவன் செவ்வாய் கிரகத்துக்கும் பாதை போட்டு விடுவானா?

இந்த அற்புத சாதனைக்கு இன்றைய விஞ்ஞான அறிவு மனிதனை தயாரித்திருக்கிறது. இன்றைய மனிதன் விஞ்ஞான மனிதனாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான். அதிலேயே தன்னை மூழ்கிக்கொள்ளும் அளவுக்கு ஈடுபட்டு விட்டான். மானிடத்தின் அசாதாரன வளர்ச்சியை முன்னேற்றத்தை அது காட்டுக்கிறது. இதனால் விஞ்ஞான அறிவு அவனை பேயாக பிடித்துக்கொண்டு விடுமா? மனிதன் அதிலே தன்னையே இழந்து விடுவானா? விஞ்ஞானத்துக்கு மெஞ்ஞானம் விரோதியா? பிரபஞ்ச அறிவு உண்மை அறிவை அழித்து விடுமா? இன்றைய மனிதனுக்கு அது தேவையில்லையா? மெடீரியலிலம் என்கிறோமே லோகாயதவாதம் தான் இன்று செல்லுபடியாகும் செலாவணியில் இருக்கவேண்டிய தத்துவம் என்பதுதானா? ஆன்மீகம் செல்லாக்காசா?

இப்படி கேள்வி பின் கேள்வியாக எழுப்பி, கேள்விகள் கேட்க யாரைக் கேட்க - கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது, புதிய சந்திர மண்ணை மிதித்து புழுதி எழுப்பி 'வண்டல் என் கால்களில் தெருப்புழுதி என் கண்களில் என்று ஒரு புதுக்கவிஞன் பாடினபடி, தன் கண்களை குருடாக்கிக் கொண்டிருக்கிறான் மனிதன். சென்று போன அறுபதுக்களில் , இதுவும் சென்ற பத்தாண்டுக் காலத்தில்{{||272|}}