பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

அப்போது தன்னை மீட்கக்கூடிய வேறு ஏதாவது இருக்குமா என்று தேடுவது இயல்புதான். ஆனால் இனி விமோசனமே இல்லை என்பதுபோல முடிவுகட்டிஆன்மிக அராஜகமனப்பாங்குடன் ஒழுக்க திவாலானவனாக, வாழ்க்கையின் அடிப்படை நியதிகளையும் உதறிவிட்டு, இவைகளில் எதில் 'எனக்கு மீட்சி கிடைக்கும் என்று பரிசோதித்துப் பார்க்கிறேன்’ என்று விஷப் பரீட்சையாக ஹிப்பி வாழ்வு வாழ்வதென்றால்! அந்தவித வாழ்வு யதார்த்தம் என்று இலக்கியத்திலே சித்தரிப்பதுதான் 'மாடர்னிட்டி' என்று கொள்வது எவ்வளவு அபத்தமானதாகும்?

இலக்கியத்தின் நோக்கம், பயன், மனிதனை ஆழ்ந்து ஊடுருவி அவன் ஆழத்துள் தீவிரமாக பாதித்து, ஆழிய மேம்பாடான கருத்துக்கள் வளரச்செய்வதுதான் என்றால் மேலே சொன்ன போக்கு மனித அழிவுக்குத்தான் இட்டுச் செல்லும். ஆண் பெண் உறவு ஒருஅடிப்படை பிரச்சனைதான். என்றைக்குமாக இலக்கியத்துக்கு விஷயம், மூலப்பொருள்கள்தான். ஆனால்மனிதன் வாழ்விலே அதுக்கு உரிய இடம்தான் உண்டு. அதுவே மனிதனை முழுப்பேயாட்டம் ஆடச் செய்வதாக எவனோ அரைவேக்காட்டு தத்துவம் ஒன்றை சொல்லிவிட்டு போனதை பிரமைப்படுத்திக் கொண்டு பூதத்தன்மையானதாக ஆக்கிவிடக் கூடாது. அது நளினமாக, நயமான அளவோடு கையாளப்பட வேண்டிய, சித்தரிக்கப்பட வேண்டிய அம்சம். ‘பெண் இயற்கையைப் பரிந்து காண துச்சாதனன்போல மனிதன் உன் துகிலை உறிகிறான் என்று புதுக்கவிஞன் கூறியதுபோல துச்சாதனகாரியமாக பாலுணர்ச்சியை அதன் பச்சையான குணத்திலேயே பச்சையாக சித்தரித்து இலக்கியத்தில் இன்னொரு புதுக்கவிஞன் சொன்னதுபோல் ‘மஞ்சள் இதழில் பச்சைகிறுக்கு'கிற எழுத்துப் போக்கை யதார்த்தம் என்று பச்சையூசி மனித சதையையே அழுகச்செய்ய முற்படுவதுதான் கலையின் உயர்ந்த பட்ச லட்சிய சித்தரிப்பா?

'துருப்பிடித்த இதயத்தை துடைக்க வந்த நேரத்தில் துருவேற்றுகிற' கைங்கர்யத்தை செய்கிறது இல்லை கலை. தண்ணீர் சொட்டின் தயவால் வெள்ளமும் கடலுமானால் நிகழும் நிமிஷத்துள் நிலைத்துள்ள அண்டத்தை தொடரும் விநாடியில் துயிலும்சத்தியத்தை, வாழ்வை மூடிக்கிடக்கும் காலத் தொடரை,

275