பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

காலாதீதத்தை வாழ்மெய்யை' உணர்ந்து ஏற்கச் செய்யும் ஒரு சத்தான பார்வையை கொள்வதுதான் கலை.

மேற்கே எப்படியோ போகட்டும் என்று இருக்க முடியாமல் போய்விட்டது இன்று உலகம் குறுகி விட்ட நிலையில். உலகத்து மனிதர்கள் ஒரு கணப்பொழுதிலே எங்கெங்கிருந்தாலும் பரஸ்பரம் நெருங்கி அறிந்து கொள்ள சாத்யமாக 'கம்யூனிகேஷன்' தொடர்பு வசதிகள் பெருகிவிட்ட நாட்களில் நல்லதோ கெட்டதோ எங்கேயோ கொட்டினாலும் நெறி எங்கேயோ ஏறுகிறது இன்று. இந்த நிலையில் புத்தக பக்கங்கள் எங்கோகக்குவதை எல்லாம் நெஞ்சுக்குள் அள்ளிக் குப்பை கொட்டிக் கொள்ளவேண்டுமா தமிழ் படைப்பாளி தானும் கக்கி பிறநெஞ்சுகளுக்குள் அசிங்கத்தை திணிக்க வேண்டுமா?

ஒவ்வொரு தமிழ் படைப்பாளியும் சிந்திக்க வேண்டிய கட்டம் இப்போது. இலக்கியப் புறம்பான அக்கறைகளை முன்வைத்து பத்திரிகை உலகம் வாசகனை, கெடுக்கக்கூடிய பணியை செய்கிறது என்று ஒலமிடுவதைவிட ‘நான் நல்லதை எழுதுகிறேனா' என்று அவன் தன்னைக் கேட்டுக் கொள்ளவேண்டும். சிங்கத்துக்கு பசி தனிந்திருந்தால் மனிதனை விரட்டிக் கொல்லாதாம் என்று அதன் சுபாவம் பற்றி சொல்வதுண்டு. புலி அப்படி இல்லை. அடித்துப் போட்டுக் கொண்டே போகுமாம் வெறிக்குணம் எப்போதும் மேலோங்கி நிற்க. அதுபோல பசி வெறி தணிந்த மனிதனிடமாவது ஒரு நிதானத்தை எதிர்பார்க்கலாம். இந்த இணைவிழைச்சு வெறிக்கு வரையறையே கிடையாது. இன்றய தமிழ் படைப்பாளி இந்த எச்சரிக்கையை மனதில் கொள்ள வேண்டும். வாசகனுக்கும் இந்த எச்சரிக்கை தேவைதான்.

அறுபதுக்களில் தமிழ் படைப்பில் இந்த இரண்டு நச்சுப் போக்குகள் தலைதூக்கி இருப்பது இலக்கியத்தின் வளர்ச்சிக்கு குந்தகமானவை ஆகும். மனிதனை மிருகமாக்கும் ஒரு படைப்பு போலியானதாகும். உண்மைக் கலைப்படைப்பு ஆகாது. ஆரோக்ய எழுத்து இன்று தேவை.

276