பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



'வழிநடை'


எழுத்துவில் காணப்படும் கருத்துக்கள் பற்றி எனக்கு வரும் கடிதங்கள், மேடைப் பேச்சுகள், பிற ஏடுகளில் வரும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள், கேட்கப்படும் கேள்விகள் இவைகளுக்கு இந்த பகுதியில் பதில், விளக்கம் தர உத்தேசம்.

சென்ற ஆண்டு ஜூலை எழுத்துவில் ‘கவிதையும் இலக்கணமும்' என்ற கட்டுரை எழுதி இருந்தேன். அதன் மீது கருத்துக்களை எதிர் பார்த்தேன். எனக்கு வந்த கடிதங்கள் நான் எதிர்பார்த்த விதமானவை எதுவும் வரவில்லை. ஒரு அன்பர் ‘புதுக்+கவிதைக்கு வடிவம் அதன் பொருளிலிருந்தே பிறக்கிறது, பழயை கவிதையிலிருந்து தோன்றிய இலக்கணத்தை வைத்து புதுக்கவிதையை அளப்பது சரியல்ல என்று என் கட்டுரை தெளிவிப்பதாக கூறிவிட்டு புதுக்கவிதையை பரிவோடு கனிவோடு அநுபவிக்க வேண்டும்' என்று சாதிக்க முற்படவேண்டுமா, இலக்கண மெல்லாம் விதி விலக்குக் கோணங்களை படைக்கும் கோணலே என்று கூறி விட்டு புதுமைக்கு இலக்கணம் கூற முன்வருவானேன்? புலமையைக் கொண்டு புதுமையை காப்பாற்ற வேண்டுமா?அதுக்கு ரசனை போதாதா என்று கேட்டிருக்கிறார்.

என் கட்டுரை மேலே கூறப்பட்ட குற்றங்களுக்கு உரியது இல்லை. புதுக்கவிதையை ரசனை அடிப்படையில் பார்க்காமல் இலக்கணத்தை வைத்து மட்டும் பார்த்து அவை கவிதையே இல்லை என்று சாடியவருக்கு பதில் என் கட்டுரை. நானும் இலக்கண ரீதியாக பார்வை செலுத்தி இலக்கணமும் எவ்வளவு தூரம் படைப்பாளி கையில் நெகிழ்ந்து வளைந்து கொடுத்திருக்கிறது என்பதை அந்த தரப்புக்கு உதாரணம் காட்டி சுட்டிக்காட்டவே எழுதினேன். அப்போது அவர் உபயோகித்த ஒரு வாக்கியமான 'ஒரு இலக்கணத்தை மீறுகையில் அதன் விளைவு அதைவிடச் சிறந்த இலக்கணமாகத் திகழுமானால் அது அறிவின் வளர்ச்சியை காட்டுவதாகும்' என்பதை

277