பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

கவிதையின் குறையை எடுத்துக்காட்டுவது எப்படி தவறாகும்? இப்படி காட்டித்தானே கவித்வம் இல்லாத வெறும் 'செய்யுள்' வழி கவிதைகள் பெருக காரணமாகி இன்று அவைகளையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனவே புதுக் கவிதையில் கவித்வத்தை பார்க்க தவறி விட்டு தளை, சீர், எதுகை, மோனை தட்டுவதாக வடையை தின்பதுக்கு பதில் துளையை என்ன ஆரம்பித்தால் உதாரணச் செய்யுள்களை எடுத்துக்கொண்டு இந்த உடைசல்களா உதாரணம் என்று காட்டுவதில் தப்பென்ன?

‘ஓசையின்பத்தின் சக்கரவர்த்தியாகிய கம்பரை உதாரணத்துக்கு இழுத்து வந்திருக்க வேண்டாம். வேறொரு வான்கோழியின் சிறகுகளை கொய்திருக்கலாம். அந்த மயில் நம் தேசிய இலக்கியத்தின் சொத்தல்லவா?' என்று உணர்ச்சி வசப்பட்டு இன்னொரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது? ஏன் கொண்டு வரக்கூடாது? பிச்சமூர்த்தி என்ற கிளியின் சிறகுகளை பிய்க்க ஒருவர் முற்படும்போது ஒருவர் வான்கோழியை ஏன் தேடிப்போக வேண்டும்? கிளிக்கும் மயிலுக்கும் தான் இணை போட்டுப் பார்க்க வேண்டும். வித்யாசம் தெரியும். விமர்சகன் சென்டிமெண்ட்டலாக இருக்கக் கூடாதே. தவிரவும் அங்கே கம்பரைப்பற்றிய முழு மொத்த பார்வைப் பேச்சு இல்லை. அந்த கவிதைபற்றிய அளவுக்குத்தான். யார் சொன்னார்கள் ஓசைஇன்பத்தின் சக்கரவர்த்தி கம்பன் இல்லை என்று?

புதுக்கவிதை மரபானதா மரபுமீறலா என்று நான் அந்த கட்டுரையில சொல்லவில்லை என்பதுக்கு பதில் என் அந்த கட்டுரையில் அது கேள்வி இல்லை. வேறு ஒரு கட்டுரைக்கு அது விஷயம், புதுக்கவிதை மரபுமீறல் ஆனால் மரபுக்கு உட்பட்டது என்று அந்த அன்பர் சொல்வதே என் கருத்தும். அந்த அன்பரும் நான் ‘தமிழ்யாப்பே குழப்பல் சேறாக இருக்கிறது சரியான வளர்ச்சியாக இல்லை என்று நான்நிலைநாட்டப் பார்ப்பதாக சொல்லி இருக்கிறார். நான் அப்படி நினைக்கவே இல்லை. மாறி வரும் வளைந்து வரும் மரபை கணிக்கத் தெரியாமல் கொக்குக்கு ஒன்றே மதியாக உடும்புப்பிடி பிடித்து பேசுபவர்களின் தெளிவு பெறாத குழம்பிய பார்வையைத்தான்சுட்டிக்காட்டுகிறேன். யாப்பைப்பற்றி இல்லை. பார்க்கப் போனால் இதையும் சொல்லலாம். யாப்பு குழம்பி குழம்பித் தெளிந்துதான் மரபு ஏறும். பல்வேறு பாவினங்கள் குழப்பத்தில்

279