பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

பிறந்தவைதான். சீர், தளை, திணை மயக்கங்கள் குழப்பம் அன்றி வேறு என்ன? இன்று அவை தெளிவானதாகி விடவில்லை நமக்கு?

யாப்பின் உடைசலுக்கும் சமுதாய நிலைக்கும் உறவு இருக்கிறது என்றும் என் கட்டுரையில் யாப்புக்கும் சமுதாய நிலைக்கும் உள்ள உறவு பற்றிய பார்வையில்லை, யாப்பின் வளர்ச்சி சமுதாய வளர்ச்சியோடு பார்க்க வேண்டிய ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறார் அன்பர். சமுதாயப் பார்வைக்கும் கவிதைப் பொருளுக்கும் உறவு இருக்கும் என்று சொல்லலாமே ஒழிய கவிதை இலக்கணத்துக்கும் சமுதாய நிலைக்கும் நேர் உறவு இருப்பதாக சொல்வதுக்கில்லை. இலக்கணம் உருவம் பற்றியது. சமுதாய நிலையாலோ உளப்பாங்கு நிலையாலோ தத்துவ நிலையாலோ பாதிக்கப்பட்டு அநுபவத்தை வெளியிட முற்படுகிறபோது மொழி கையாளுதலின் மூலம் உருவம் அமைகிற போது அதுக்கு பயனாகிற அம்சங்கள் தான் சேர்ந்து இலக்கணம். ஆக அனுபவ வெளியீட்டு தோரணைக்கு ஏற்பத்தான் யாப்பில் உடைசல்கள் - உடைசல்கள் என்பதைவிட புது ஒலிக்கீறல்கள் - ஏற்படுகிறது.

அடுத்தபடியாக மதுரையில் நடந்த இ.ப.த. மன்றம் மாநாடு பற்றி தமிழ் எம்.ஏ.க்கள் மகாநாடு’ என்று தலைப்பில் எழுதி இருந்ததுக்கு ஆட்சேபணை. அது கேலியாம், எப்படி ஆகும்? தமிழ் மட்டும் படித்த வித்வான்கள், புலவர்கள் கூட்டத்திலிருந்து மாறுபட்டு இங்கிலீஷ-ம் படித்த எம்.எ. எம். லிட்டுகள் பெரும்பாலும் கூடியதை குறிப்பிட இந்த தலைப்பு. நான் இந்த மாதிரி கூட்டங்களைத் தான் வரவேற்கிறேன். தமிழ் வளர்ச்சி இவர்கள் மூலம்தான் ஏற்பட வழி இருக்கு என்பதே என் கருத்து. சரியாகப்படித்திருந்தால் என் கட்டுரை புரிந்திருக்கும் . இந்த மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று தற்காலப் படைப்பாளர்களை புலவர்கள் தரப்பில் ஒரு தினிசாக கூறப்பட்டு வந்ததே அதை இதேபோல எடுத்துக் கொள்ளக்கூடாதோ? பெயர்களை வைத்து சின்னவிஷயங்களில் ஏன் விவகாரம் செய்ய வேண்டும் என்பதுதான் புரியவில்லை.

இன்னொன்று, ந.பி.யின் வாழ்வியல் பார்வையிலிருந்து புதுக்கவிதை விலகிப்போகிறது. தி.சோ. வே. புதிய உழவுக்கருவியை கீழே போடுகிறார். தாங்கள் புதுமைப்பித்தன் பொன்னகரத்தையே

280