பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மதுரை இ.வ. கருத்தரங்கு


காந்தீய நாவல்


(1969 அக்டோபர் இறுதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற இலக்கிய வட்டக் கூட்டத்தில் ந. சிதம்பர சுப்ரமண்யனின் “மண்ணில் தெரியுது வானம்" நாவல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது).

ராஜலக்ஷ்மி : காந்தி நூற்றாண்டு நிறைவு சமயத்தில் வாசகர் வட்டத்தால் வெளியிடப்படும் இரண்டாவது காந்தியுக நாவல் இது என்று நினைக்கிறேன். ஆசிரியர் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மணிக்கொடி யுகத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே பிரசித்திபெற்ற 'இதயநாதம்' மில் சங்கீதத்தின்மேன்மையை எடுத்துக் காட்டினார்என்றால், இங்கே இந்த நாவலில் காந்தியத்தின் உயர்வைத் தெளிவாகவும் சிறப்பாகவும் சித்தரிக்கிறார். நடராஜன் என்னும் கதாநாயகன் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. 1930 ல் ஆரம்பித்து மகாத்மாவின் பேரிழப்பிற்குப் பின்னரும் சிறிது காலம் வரை நடந்து முடியும் இந்நாவலில் காந்திஜியும் இரண்டொரு அத்தியாயங்களில் பாத்திரமாக இடம் பெறுகிறார். அஹிம்சை, பிரபஞ்சம் முழுதும் வியாபித்திருக்கும் கடவுள் எனும் சத்தியம், கலப்பு மணம், நேர்மை போன்ற காந்தீயத் தத்துவங்களைப் பிரசார பீரங்கிகளாகக் கொண்டு வாசகர்களைப் பயமுறுத்தாமல், கதையின் இயற்கையான போக்கிற்கு ஏதுவாக, நளினமாக இணைத்து மனதை ஈர்க்கிற அளவுக்கு எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

டி.ஆர். நடராஜன்: நீங்கள் சொல்வது மாதிரி காந்தி நெறிகளில் தான் இந்த நாவல் படைக்கப்பட்டிருக்கிறது. என்பதை ஆரம்ப அத்தியாயங்களிலிலேயே உணரமுடிகிறது. “ஆங்கில ராஜ்ஜியத்தைத் தான் எதிர்க்கிறேனேயொழிய ஆங்கிலேயர்களை யல்ல” என்றார் காந்தி. என் படிப்பிற் கெட்டியவரை, இந்த நாவலுக்கு முன், வேறு

282