——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா
நின்றுவிட்ட பிறகு, சில வருடங்கள் கழித்து, இலக்கிய விஷயங்களை விளக்குவதற்காகவே 'பார்வை' (Perspective) என்ற இதழைத் தொடங்கினார். இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டிருந்த அதுஅவர் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. மூன்று இதழ்களுடன் நின்று விட்டது.
சில ஆண்டுகளுக்குப் பின்னர், ‘கவை’ என்ற காலாண்டு இதழைத் தொடங்கினார். அதுவும் மூன்று இதழ்களுக்கு மேல் வளரவில்லை.
செல்லப்பா ஆய்வுமுறை விமர்சனத்தை (Analytical Criticism) கைக் கொண்டிருந்தார். ஆயினும் சிலரது படைப்புகளை அவர் அப்படி ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என்றே சொல்லவேண்டும்.
அவர் பிடிவாதமாகச் சில கருத்துக்ளைக் கொண்டிருந்தார். அவற்றை அவர் மாற்றிக்கொண்டதேயில்லை. 'மணிக்கொடி’ எழுத்தாளர்களுக்குப் பிறகு சிறந்த சிறுகதைப் படைப்பாளிகள் தமிழில் தோன்றவேயில்லை என்பது அவற்றில் ஒன்று. ‘எழுத்து'க்குப் பிறகு விமர்சனம் கவனிக்கப்படவில்லை என்றும் அவர் கருதினார்.
அனைத்தினும்மேலாக, பி.எஸ். ராமையா சிறுகதைகள் பற்றி அவர்மிக உயர்ந்த கருத்துகொண்டிருந்தார். ‘படைப்புக் களத்தில் ராமையாஸ்தானம் தான் முதல். வேர்ல்ட் ஃபிகர்' அவர். அவ்வளவு வைரைட்டி. தீம்ஸ். யாராலும் கன்சீவ் பண்ணமுடியாது. ஐரணிக்கு அவர் தான் ராஜா. உலகத்திலேயே’ என்று ஓங்கி அடித்துச் சொல்லி வந்தார்.
பி.எஸ். ராமையா கதைகளைப் பற்றி வேறு விதமான கருத்து தெரிவித்தவர்களை விரோதிகளாக மதித்தார் அவர்.
‘ராமையாகதைகள் பற்றி நீங்கள் இப்படி உயர்வாகப் பேசுவது உங்களுடைய வத்தலக்குண்டு ஊர் அபிமானத்தினால் தான்’ என்று சி. கனகசபாபதி ஒரு சமயம் செல்லப்பாவிடம் சொல்லிவிட்டார்.
செல்லப்பாவுக்கு கோபம்வந்தது. கனகசபாபதியுடன் மேலும் பேச விரும்பாமல் அவரைவிட்டு வேகமாக நடந்து போய்விட்டார்.
22