பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

எந்த நாவலிலும் ஒன்று ஆங்கில அரசாங்கத்தைத் துவேஷித்தமாதிரியே ஆங்கி அதிகாரிகளையும் துவேஷித்திருக்கிறார்கள். அல்லது ஆங்கிலேயர்களைப் பற்றியே பிரஸ்தாபிக்காமலிருக்கிறார்கள். ஆனால், இங்கே, ஆசியரின் கால கட்டம், கிட்டத்தட்ட நடராஜனைத் தன்னில் பார்க்கிற மாதிரி அமைந்திருக்கிறது. அதனால் ஆங்கிலேயர்களிடையே காணப்பட்ட பெருந்தன்மை, ஒழுக்கம், நேர்மை, இறைபக்தி, தத்துவ விசாரம் போன்ற நற்குணங்களைக் கெளபர் துரை, ஜார்ஜ் ரஸ்ஸல், க்ரீன் போன்ற பாத்திரங்களில் தீட்டியிருக்கிறார். மனிதாபிமானம் என்றால் “தொழிலாளி ஜே, போலீஸ்காரன் அக்கிரமம் செய்கிறான். ஒழிக" என்று கதறுவது அல்ல. லெனினுக்கு லிப்ட்காரஜோவிடம் இருக்கிற அபிமானத்தைக் சொல்லி விட்டுச் சட்டத்தின் காவலர்களைக் கொள்ளைக்காரர்களெனச் சித்தரிப்பது மனிதாபிமானம் (humanism) என்றால் அது இங்கே இல்லை தான். ஆனால் ஓர் இலக்கிய மனத்திற்கு உற்சாகமும் உத்வேகமும் அளிக்கிற அளவில், கெளரவமான சமூகத்தின் தனி மனிதர்கள் மேல் ஓர் இலக்கியப் படைப்பாளி - ஆண்டன் செகாவ் மாதிரி - காட்டும் கவனம், மனிதாபிமானம், சிதம்பரசுப்பிரமணியனின் எழுத்தில் மின்னுகிறது.

கணேசன் : வெள்ளைக்காரர்களைக் சிலாகித்து நன்றாக எழுதியிருக்கிறார். சரி. பின்னால் தந்தையின் பேச்சை மீறி காந்தியின் உன்னதமான சுதந்திரப் போராட்டததில் நடராஜன் பங்கு பெறுகிறான். சிறை அனுபவத்திலும் பின்னர் விடுதலையாகி வெளி வந்து பெறும் பத்திரிகை அனுபவங்களிலும் புடம் போடப்படுகின்ற நடராஜன் தேசீயப் போராட்டங்களைப் பற்றியும், உலகப்போர்கள் பற்றியும் கூடச்சிந்திக்கிறான். அந்தக் காலகட்டத்தில் தமிழ் நாட்டில் இருந்த தேசிய எழுச்சியைப் பற்றியோ, உள் நிலவரங்களைப் பற்றியோ ஏன் பிரஸ்தாபிக்காமலிருக் கிறான்? அதாவது, இப்படிக் கேட்கிறேன். ஐஸ்டிஸ் கட்சியினரின் போக்கு, தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் இந்தி எதிர்ப்பு இயக்கம் இவையெல்லாம் இங்கேயிருந்த தேசீய இயக்கத்தைப் பாதித்தனவா, இல்லையா? ஆசிரியர் இவற்றை ஒதுக்கி விட்டதேன்.

திருவையாறு ராஜகோபாலன்: நீங்கள் சொல்வது விசித்திரமாக இருக்கிறது. ஜஸ்டிஸ் கட்சியினரைப் பற்றி என்ன சொல்ல