பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————சி.சு. செல்லப்பா

வேண்டும்? அவர்கள் ஆங்கில அரசாங்கத்தின் அடிவருடிகள் (Stooges) எனும் படியாக இருந்தது பற்றியா? இந்தியரின் சுதந்திர வேகங்களுக்குத் தடையாக இருந்தது பற்றியா, மேலும் சுயமரியாதை இயக்கமும் ஹிந்துத்துவேஷமும்,ஒரு மகத்தானசுதந்திரவேள்வியின் முன் எந்த அளவுக்கு முக்கியத்துவமானவையோ தெரியவில்லை. ஆசிரியர் ஒதுக்குகிறார் என்கிறீர்கள்? எதை, எதற்காக ஒதுக்க வேண்டும்? தவிரவும் தனிமனிதனின், தேசத்தின் கதை இது என்று தான் ஆசிரியர் தமது முன்னுரையில் குறிப்பிடுகின்றார். தமிழ் நாட்டில் காந்தியுகம் எப்படியிருந்தது என்பதைச் சொல்வதற்கு இந்த நாவலை எழுதியதாக ஆசிரியர் சொல்லவில்லையே! பம்பாயில் கூட சிறிதுகாலம் கதை நடக்கிறது. மேலும் தமிழ் நாட்டில், தேசியப் போராட்டத்தின் ஆக்க பூர்வமான (constructive) பாதிப்பு எங்ஙனமிருந்தது என்பதையும் இலக்கிய மறுமலர்ச்சி, சிறுகதையின் பொற்காலம் (பக் 181) ஆகியவை பற்றிச் சொல்லும் போதும், கள்ளுக்கடை மறியல் அந்நியத் துணி பகிஷ்காரம் மாண்டேகு - செம்ஸ்போர்டு திட்டத்தின் கீழ் காங்கிரஸ் தேர்தல் குறித்து நடந்த மகாநாடு என்று குறிப்பிடும்போதும், ஆசிரியர் தமிழ் நாட்டைப் பற்றிக் குறிப்பிடத்தானே செய்கிறார் ஈ.வெ.ராவும் அண்ணா துரையும் நடத்திய இயக்கங்கள் பிராந்திய வெறிகளிலும், குறுகிய நோக்கிலும் எழுந்தவை தாமே! இவர்களைப் பற்றியோ, ‘சங்கடங்களை அதிகரிப்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் என்று மகாத்மாவினால் குறிப்பிடப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றியோ ஒரு காந்தீய நாவலில் சொல்வற்கு என்ன அவசியம்?...

கோ.முருகன் : நாவலில் மகாத்மா இடம் பெறும் நிகழ்ச்சிகள் விருவிருப்புடன் இறுக்கமாக அமைந்துள்ளன. கம்யூனிஸம் பற்றிக் காந்தியின் கருத்துக்கள் என்ன என்பதை ஆசிரியர் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார். "என் கொள்கை என்னைத் திருத்துவதில் ஆரம்பிக்கிறது. உங்கள் சித்தாந்தமோ மற்றவர்களைத் திருத்துவதில் ஆரம்பமாகிறது.' என்கிறார்காந்தியடிகள். இந்த முப்பது வருஷங்கள் கழித்தும் இச் சொற்களின் வாஸ்தவத்தை நினைக்கையில் புல்லரிக்கிறது. காந்தியடிகள் ஒரு கம்யூனிஸ்ட்தான் என்று சொல்கிற அளவுக்கு சமீபத்திய கோஷங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் காந்திஜியே குறிப்பிடுவது போல் கம்யூனிஸத்துக்கும்