பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

காந்தீயத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு சத்தியத்தை நம்புவதில் இருக்கிறது. விஞ்ஞான சோஷலிஸ் நம்பிக்கை வாதிகளுக்கும் காந்தீயவாதிகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு நாம் கண்ணால் காண்கின்ற நிஜம். இதை அன்றே மகாத்மா சொல்லியிருக்கிறார். மாயையான சோஷலிலமும், அதன் விளவைான ஒரு கற்பனைச்சமூகமும் ஏற்படுத்தப் போகிற நியதிகள் மட்டும் எந்த அளவுக்கு நிஜமானவையோ? இந்தியாவின் பெருமை அதன்அடிப்படைப் பெருமிதம், வேதங்களில் நிலைக்கிறது' என்றார் டாக்டர் ராதாகிஷ்ணன், வேதரிஷி காலம் முதல் அப்பெல்லோயுகம் வரைக்கும் இன்னும் இந்த 'நானை'க் கண்டவர் யாருமில்லை. காந்திய சொல்படி அக வளர்ச்சியின் முதிர்ச்சியில்தான் மனிதப் படைப்பின் உயர்வை அறிய முடியும். சுரண்டலற்ற, ஏற்றத் தாழ்வில்லாத சமூகம் போன்றவை காதுக்கு இனிமையானவை. கண்ணால் காண இயலாதவை. எந்திர வளர்ச்சி மனித ஆத்மாவை நசுக்குகிறது என்றார் அல்டஸ் ஹக்ஸிலி. இதையே இந்திய சமூகத்தின் பாரம்பரியம் உணர்த்துகிறது. ந.சி.யின் நாவல் சொல்கிற இந்த யதார்த்தமான உண்மை நாவலின் வெற்றியை இன்னும் அதிகரிக்கிறது.

சேஷாத்திரி : எனக்கு ஒரு சந்தேகம். கேட்கிறேன். ஆகஸ்ட் புரட்சியைப் பற்றி மொட்டை மாடியில் இருந்து கொண்டு (குரலில் கேலி வழிகிறது) பிரசங்கம் செய்கிறார்கள். நேரு தலைமை தாங்கிய போராட்டமல்லவா அது? தவிரவும் மொட்டை மாடியில் இருந்து பேசியபடியே இவர்கள் சாதிக்க நினைத்திருப்ப தென்ன.?

நடராஜன் : ஆகஸ்ட் புரட்சிக்கு நேரு தலைமை வகித்ததால் மட்டும், புரட்சியில் ஏற்பட்ட அதிக்ரமங்கள் எல்லாம் நியாயமாக ஆகிவிடுமா? அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருக்கிறேன் என்பதால் அச்சொத்துக்களை நான் அழிப்பது என்ன நியாயம்? ஆகஸ்ட்புரட்சியில் மக்கள் போலிஸ் ஸ்டேஷன்கள், தபாலாபீஸ்கள், ரெயில் ஸ்டேஷன்கள் ஆகியவற்றை எல்லாம் தாக்கினர். தந்தி, டெலிபோன் கம்பிகளை அறுத்தார்கள். தண்டவாளங்கள், பாலங்களைச் சேதப்படுத்தினர். அஹிம்சாவாதியான காந்திஜி ஆகஸ்ட் புரட்சியைப் பற்றிச்சொன்னதென்ன? “செய்யப்பட்டவையாவும் சரியாகவே செய்யப்பட்டிருக் கின்றன என்றோ அம்மாதிரி தான் செய்யவேண்டும் என்றோ நான் கூறமுடியாது. மாறாக, பல