பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

சங்கரநாராயணன் : ஆனாலும் நடராஜனை வேலையை விட்டுவிடும் அளவுக்கு சிரமப்படுத்துகிற பத்திரிகை அதிபரை, நடராஜன் எதிர்க்காமல் விட்டு விடுவது என்பது இயற்கையாக இல்லை. இவ்வளவுக்கும் அவன் வரையில் தவறு ஏதும் செய்யாதவன் என்னும் போது அவன் இந்த அநீதியை எதிர்த்துப் போராடியிருக்கக் கூடாது? ஒரு சமயம் காந்திவழி அஹிம்சையை மேற்கொண்டு விட்டானோ? ஆனாலும் எப்படிப் பார்த்தாலும் பொறுப்பற்ற ஒரு கோழையைாகத் தான் தென்படுகின்றான் என்றே தோன்றுகிறது.

நடராஜன் : இங்கே தவறுவது நீங்கள் தான் என்று நினைக்கிறேன். ‘மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்' என்றாள் தமிழ் மகள். என்னையோ, என் கொள்கையையோ உணராத, உணர விரும்பாத ஒருவனிடம் , போய் முட்டிக் கொள்வது அறிவுடையவனின் செயல் ஆகுமா? 'அநீதி செய்து விட்டார்கள் வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் செய்' என்று கூக்குரலிட்டு காந்திஜியை உதவிக்கு அழைப்பதில் தென்படுவது புத்திசாலித்தனமல்ல. காந்தியடிகள் உண்ணாவிரதமிருந்தால் அது சுயநலத்தின் விளைச்சலல்ல. அடுத்தவனின் உரிமைகள் பாதிக்கப்பட்டபோது தான் காந்தியடிகள் உண்ணா நோன்பை மேற்கொண்டார். நாவலில் சக ஆசிரியர்களிடம் பேசுகையில் 'என்கதை முடிந்தது’ என்கிறான் நடராஜன். தனக்கு இழைக்கப்பட்டதை அநீதி என்று கூடக் கருதாத ஒரு சாத்வீகம் நிறைந்த காந்தியுக மனிதனைக் காண்கிறோம். ‘உண்ணாவிரதம் செய்திருக்க வேண்டும்’ என்று நாம் ஆசிரியருக்கு யோசனை சொல்ல உரிமை கிடையாது. நடராஜன் வீழ்ச்சியடைந்தான் என்பது தனது சொப்பனா வஸ்தையில் ஏற்படுத்திக் கொண்ட அழுத எண்ணம். போட்டுக் கொண்டிருக்கிற கறுப்பு (அல்லது சிவப்பா?) கண்ணாடியின் பிறழ்ச்சியான பார்வை. நடராஜன்மார்க்ஸ் ராஜனாயிருந்தால் பொறுப்பற்றவனாயிருந்திருக்க மாட்டான் போலும்!

ராஜலக்ஷ்மி : இந்த நாவலில் சில இடங்களை - ஆங்கிலப் பாடல்கள், சிறுகதைகள் ஆகியவைகளை-தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியது.

287