பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————சி.சு. செல்லப்பா


கோ.முருகன்: நடராஜன் சிந்தனை பின்னோக்கிப்பார்ப்பதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும், பிறகு அவன் பார்வையிலேயே நேரடியாக விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அப்போது சத்யாக்கிரக நாளில் நல்லதம்பியைப் பற்றி நினைக்கிறான்: ‘நல்ல தம்பி மேல் நாட்டில் பிறந்திருந்தால், ஜேம்ஸ் பாண்ட் வீரராகத்தான் திகழ்ந்திருப்பார்' என்று. ஆனால் ஜேம்ஸ் பாண்டைக் கதாநாயகனாகக் கொண்டு.ஐயான்ஃப்ளெமிங் எழுதிய 'காளினோவா ராயல்’ என்று முதல் நாவலே 1953-ல் தான் வெளி வந்தது.

நடராஜன் : பொதுவில் இந்த நாவலில் ஆசிரியரின் சிறந்த எழுத்தை ரசிக்க முடிகிறது. சத்தியம் (truth) கந்தரம் (Beauty) சிவம் (Goodness) என்னும் மூன்றும் எழுத்தில் வீர்யத்துடன் ஜொலிக்கின்றன. இம்மூன்றின் ஒன்றிய பிரமிப்பான சேர்க்கையில் ஆசிரியரின் அடிப்படை இலட்சியத்தை உணர முடிகின்றது. வாசகர் வட்டம் பாராட்டுக்குரிய பணியைச் செய்திருக்கிறது. பார்த்தசாரதியின்ஆத்மாவின்ராகங்களைப்போல இதுவும் ஒரு சிறந்த காந்தீய சகாப்த நாவல்.


கடவுள்கள்

இர. பன்னிர்செல்வம்

கடவுள் :
மண்ணுலகில் ஒரு சாலை ஓரம்
சாலை ஓரம் பரத்திய அழுக்குத்துணி
அழுக்குத் துணியில் ஆயிரம் ஓட்டை
ஓட்டைகளிடையே சில்லறைக்காசு
காசுக்கிடையில் ஓர் வெள்ளிப்பணம்
அதற்கு சொந்தக்காரன் ஒரு யாசகன்.
யாசகன் :
ஆகாசத்தில் ஒரு நீலவானம்
நீலவானத்தில் அழுக்கு மேகம்
மேகத்திடையில் ஆயிரம் விண்மீன்
மீன்களிடையில் ஒரேநிலவு
அதற்குச் சொந்தக்காரன் கடவுள் !
288